Header image alt text

சில நாட்களுக்கு முன்னர் ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்ற நாலக்க கொடஹேவா, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக, அறிவித்துள்ளார். Read more

பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளார். அனைத்து கட்சி அரசாங்கம் ஒன்றை அமைந்து சவால்களை வெற்றிக் கொள்ள பாராளுமன்றத்திற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி அவர் இந்த கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

அடுத்த மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தரம் 5க்கான புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார். Read more

பொதுமக்களினால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு நான், அறிவுறுத்தவில்லை என பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன (ஐ.ஜி.பி) தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் ஆணைகுழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் முக்கியஸ்தரான சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்தது தொடர்பாக   காத்தான்குடி பிரதேசத்தில்   சந்தேகத்தின்  பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த  60 பேரில் 5 பேர் இன்று (22) வெள்ளிக்கிழமை   பிணையில் விடுவிக்கப்பட்டனர். Read more

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் – பட்டா ரக வாகன விபத்தில்  சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more

மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித பேருகொட நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராக இன்று (22) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். Read more

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள காயாமடு சிவசக்தி முன்பள்ளியின் சிறுவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் 11.00மணியளவில் நடைபெற்றது. Read more

இலங்கையின் தற்போதைய நெருக்கடியான நிலையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது Read more

புதிய இராஜாங்க அமைச்சர்கள் 04 பேர் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று (19) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். Read more