தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தமிழ்த் தேசிய மேதின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள மீனிசை பூங்காவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மேதின நிகழ்வின் ஆரம்பத்தில் கல்லடி பாலத்திலிருந்து தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையிலான பேரணி நடைபெற்றது. Read more
சுவிஸ் சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்ட மே தின ஊர்வலம் Swiss அமைப்புகளுடனும், இங்கு வாழும் பல நாட்டு மக்களின் விடுதலை அமைப்புகளும், சமூக மேம்பாட்டு அமைப்புகளும் இணைந்து நிகழ்த்தப்பட்டது.
மக்கள் பொது இடங்களுக்குள் நுழைவதற்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்காக, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கிவரும் 11 கட்சிகளைச் சேர்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் தாம் ஒருபோதும் இணையப்போவதில்லை என சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுர தலைமையிலான தேசிய மக்கள் முன்னணி என்பன அறிவித்துள்ளன.
கொழும்பு நகரை அண்மித்து முன்னெடுக்கப்படும் மேதின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பில், இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.