இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக அவசரகால சட்டத்தை பயன்படுத்துகின்றமைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான அதிகாரிகள் கண்டனம் வௌியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இன்று வௌியிட்டுள்ள ஒன்றிணைந்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தி, மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரி தொழிற்சங்க இணைப்பு மத்திய நிலையமும் ஒன்றிணைந்த மக்கள் இயக்கமும் இணைந்து ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் இன்று ஏற்பாடு செய்திருந்தன.
செயற்பாட்டில் இருக்கும் 7 நகர சபைகளை மாநகர சபைகளாக மாற்றவும் 3 பிரதேசசபைகளை நகர சபைகளாக மாற்றுவது தொடர்பாக அமைச்ச்ரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனமதி வழங்கியுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது..
சீன உளவு கப்பலான ‘யுவாங் வாங் 5’ இன், வருகையை ஒத்திவைக்குமாறு, சீன தூதரகத்திடம் ராஜதந்திர கோரிக்கை விடுக்கப்பட்டமையை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.