தடை நீக்கப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்குக் கால அவகாசத்தை வழங்கிப் பார்க்க வேண்டும் என தெரிவிக்கும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, பயங்கரவாதச் செயற்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபட்டால் எந்நேரத்திலும் மீள தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். Read more
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவர், ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியமையால் தான் உயிரிழந்தார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் இவ்வார இறுதியில் நீக்கப் படும் என்று கூறியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனி நீடிக்கப்படாது என்றார்
ஐக்கிய இராச்சியத்தின் புதிய வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில் (DCTS) இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையின் 80%க்கும் அதிகமான ஏற்றுமதிப் பொருட்களுக்கு இங்கிலாந்து சந்தையில் வரியின்றி பிரவேசிக்க கூடிய வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.GSP க்கு மாற்றாக இங்கிலாந்து அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறைமை இதுவாகும்.
இலங்கையில் வாழ்கின்ற அநாதை, ஆதரவற்ற, கைவிடப்பட்ட, துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிய மற்றும் சட்டப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ள பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, உடல் மற்றும் உள ரீதியான நல்விருத்தி போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்காக, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் சிறுவர் அபிவிருத்திச் சேவைகள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
தன்னை இலங்கையிலிருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கெலிக் பிரேசர் என்ற பிரித்தானிய பெண் சமர்ப்பித்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட Dornier 228 விமானம் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் கட்டுநாயக்கவில் விமானம் கையளிக்கும் நிகழ்வில் இணைந்துகொண்டார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தற்போதைய அரசாங்கம் வழங்கியிருந்த வாக்குறுதிகளுக்கு அமையவே, தடை செய்யப்பட்டிருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக, எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதற்கட்ட பணிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தற்போது தொழில்நுட்ப செயலணியானது குறைபாட்டை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
சீன கப்பலை தனது கடற்பகுதியில் நிறுத்த இலங்கை அனுமதித்ததை அடுத்து, எழும் எந்த சவால்களையும் சமாளிக்க இந்தியா நன்கு தயாராக உள்ளது என்று இந்தியாவின் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.