தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதன்போது, இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பில் இலங்கையில் உள்ள மலையக மக்களுடைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. Read more
வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்த நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு, புனர்வாழ்வு பெற்றுவந்தவர்களே தப்பியோடியுள்ளனர் என்றும் மாலை விளையாட்டுப் பயிற்சியின்போது அவர்கள் தப்பியோடியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
அடுத்த வருடம் மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி, புதிய உறுப்பினர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதியாகும் போது, உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கான புதிய அமர்வுகளை ஆரம்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டார். அதற்கு தேவையான சட்ட ரீதியான அதிகாரங்கள் தம்மிடம் காணப்படுவதாக அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று (15) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன்,ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
திருக்கோணேஸ்வரம் தொடர்பான நூல் அறிமுக விழா 15.11.2022 செவ்வாய்க்கிழமை மாலை 3.30மணியளவில் திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை நகரசபை நூலகத்தில் கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் சட்டத்தரணி துஸ்யந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உக்ரைனுக்கு ரஷ்யா போர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை புறக்கணித்துள்ளது.இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், பிரேசில், எகிப்து, இந்தோனேசியா, இஸ்ரேல், நேபாளம், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நேற்று (திங்கட்கிழமை) உக்ரைனுக்கு யுத்த இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.சேதம், இழப்பு மற்றும் காயம் ஆகியவற்றிற்கான இழப்பீடுக்கான சர்வதேச பொறிமுறையை நிறுவுவதற்கான இந்த தீர்மானத்துக்கு சுமார் 50 நாடுகள் இணை அனுசரணை வழங்கின.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து, சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்றனர் மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், காத்தான்குடியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 16 பேரின் விளக்கமறியல் உத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதிவரை நீடித்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல், இன்று (15) உத்தரவிட்டார். 2019 ஏப்ரல் 19ஆம் திகதி தாக்குதலில் ஈடுபட்ட சஹரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 66 பேரை கைது செய்யப்பட்டனர்.
நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று (14) சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட (பட்ஜெட்) முன்மொழிவுகள்….
தமிழ் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நாளை மாலை 5.30க்கு இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் குறித்த சந்திப்பானது, கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்புக்கு அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். இதன்போது, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வருடத்தின் இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்தார். பரீட்சைகள் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன இதனை தெரிவித்தார். அத்துடன், பரீட்சைகள் திணைக்களத்தின் கொடுப்பனவுகள் தொடர்பிலான முழுமையான மீளாய்வுக்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.