இலங்கைக்கான குறிப்பிட்ட மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த நிதியளிப்பு உத்தரவாதங்களுக்கு உறுதியளிக்க வேண்டியது மிகவும் அவசரமானதாகும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெல்லன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெறும் ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னர் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read more
பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள்இ பலவந்தமாக நுழைய முயற்சித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தைஇ திறக்குமாறு வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று பிற்பகல் கல்வி அமைச்சுக்கு சென்றனர்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(23) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு, சட்ட ரீதியாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் அவ்வாறு தேர்தலை நடத்துவதற்கு போதுமான நிதி இல்லை எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.