இலங்கைக்கான குறிப்பிட்ட மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த நிதியளிப்பு உத்தரவாதங்களுக்கு உறுதியளிக்க வேண்டியது மிகவும் அவசரமானதாகும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெல்லன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெறும் ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னர் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனா உட்பட அனைத்து இருதரப்பு உத்தியோகப்பூர்வ கடன் வழங்குநர்களும், வளர்ந்துவரும் நாடுகள் மற்றும் நெருக்கடியிலுள்ள வளர்ந்து வரும் சந்தைகளுக்கான அர்த்தமுள்ள கடன் மறுசீரமைப்புகளில் பங்கேற்க தாம் தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் அமெரிக்க திறைசேரி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.