Header image alt text

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. சிவில் அமைப்புகளுடன் இணைந்து இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என PAFFREL அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாகவும், இதுவரை தேர்தலுக்கான நிதி வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். Read more

தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  2023 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்க அரச அதிகாரிகள் அண்மைக்காலமாக மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து தேர்தல்களும் மிகவும் முக்கியமானவை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்துயுள்ளது. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாத நிலையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டுப்பாடு விசேட ஆணையாளர்களின் கீழ் மாற்றப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 19ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், அதற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Read more

சீனாவின் ஆதரவு இல்லாமலும் இலங்கைக்கான கடனுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆலோசித்து வருவதாக Bloomberg இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.  இலங்கைக்கான  கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனாவின் ஆதரவு இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், சர்வதேச நாணய நிதியம்  இந்த விடயம் தொடர்பாக பரீசிலித்து வருகிறது. சீனா இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மறுசீரமைப்பது தொடர்பிலான உறுதிப்பாட்டை வழங்குவதை பிற்போட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வௌியாகியுள்ளது. Read more

இலங்கையில் இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் நாட்டில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ள போதிலும், தடையை தளர்த்துமாறு ஜேர்மனி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. Read more

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் கடன்கள் தொடர்பில் ஆராய, சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் குழுவின் அதிகாரிகள் இன்று புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. Read more

இன்றையதினம் தமிழ்நாடு இந்து மக்கள் கட்சியினுடைய தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் மரியாதையின் நிமித்தம் இன்றுமுற்பகல் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்திற்கும் உமாமகேஸ்வரன் நூல்நிலையத்திற்கும் விஜயம் செய்திருந்தனர். இதன்போது அவர்கள் புளொட் நினைவில்லப் பிரிவு பொறுப்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர். Read more

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்குவதில் பாரிய சிக்கல் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டபோது அவர்கள் இதனை  கூறியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரச அச்சகம் இணங்கியமைக்கு அமைய, உரிய தினத்தில் தபால் மூல வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்காமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். Read more

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரை தலா ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டார். அமெரிக்காவில் வசிக்கும் இமாட் சுஹேர் என்பவருக்கு 2014 ஆம் ஆண்டு சட்டபூர்வமான ஆவணம் இன்றி மத்திய வங்கிக்கு சொந்தமான 6.5 மில்லியன் டொலர்களை வழங்கியமை தொடர்பில் தீனியாகல பாலித்த தேரர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Read more