இலங்கையில் கடுமையான குடியியல் மற்றும் அரசியல் உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை அரசாங்கத்திடம் 60க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை செய்துள்ளது. இந்தநிலையில் மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவை இந்த பரிந்துரைகளை வரவேற்றுள்ளன. Read more
வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த ஜனாதிபதி, தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு அவசியமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். உடனடி மாற்றத்திற்கான அமைப்பினால் நேற்றுமுன்தினம் (29) ஏற்பாடு செய்யப்பட் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.சிறுபான்மை மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியான நிரந்தர தீர்வு அவசியமாகும்.
பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது. ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஆரம்பமாகிய பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக ஊடகங்களையும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர். வர்த்தமானியின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்ட வரைபு எதிர்காலத்தில் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் வசதியினால் இலங்கை மக்களின் உரிமைகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. வருமானத்தை அதிகரிக்கும் கொள்கைகளால் பொருளாதார, சமூக உரிமைகள் மேலும் சிதைக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் எனவும் ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்கள் மூலம் பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் ஒலுமடுப் பிரதேசத்தினை அண்டிய வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமையை கண்டித்து நாளை வியாழக்கிழமை (30.03.2023) வவுனியாவில் இடம்பெறவுள்ள கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்துள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (தமிழ் தேசிய கூட்டமைப்பு) முழுமையான ஆதரவினை வழங்கியுள்ள நிலையில் அது தொடர்பில் இன்றையதினம் திருகோணமலையில் மேற்படி கட்சிகள் ஊடக சந்திப்பொன்றினை நடத்தியிருந்தன.
யாழ். சுன்னாகம் பரித்திகலட்டியைப் பிறப்பிடமாகவும் வவுனியா 30/41F முதலாம் ஒழுங்கை, கோவில்வீதி, குருமண்காட்டை வதிவிடமாகவும் கொண்டவரும், வவுனியா Safety Credit, Safety Guncare, Safety Mobile நிறுவனங்களின் உரிமையாளர் தோழர் மயூரன் அவர்களின் பாசமிகு தந்தையுமான திரு செல்வரெட்ணம் மகேந்திரராஜா அவர்கள் இன்று (29.03.2023) புதன்கிழமை இயற்கையெய்தினார்.