யாழ். மாநகர சபைக்கு மீண்டும் புதிய மேயரை தெரிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனின் கையொப்பத்துடன், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. Read more

வவுனியா சேமமடு சண்முகானந்த மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் சிறப்பு விருந்தினராகவும் பழைய மாணவனாகவும் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் வ்வுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்தபோது…,
ஜேர்மனியில் இன்று (03-03-2023)தனது பத்தொன்பதாவது பிறந்த தினத்தை கொண்டாடும் பரத்ராஜ் என்பவர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜேர்மன் கிளையின் ஊடாக மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் வசிக்கும் கழகத் தோழர் ச.நித்தியகுமார் என்பவர் சுயதொழிலாக மேற்கொள்ளும் வெற்றிலை செய்கையை மேம்படுத்துவதற்காக நாற்பதாயிரம் ரூபாய்(40,000/-) நிதி உதவியை கழகத்தின் சமுக மேம்பாட்டுப்பிரிவுக்கு வழங்கியுள்ளார். இவ் உதவி 03-03-2023ம் திகதி கழகத்தின் சமுக மேம்பாட்டுப்பிரிவு பொறுப்பாளர் ந.ராகவன் அவர்களினால் ச.நித்தியகுமாரிடம் கையளிக்கப்பட்டது.


சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) இலங்கை கோரியுள்ள கடன் வசதிக்காக, சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீன வௌிவிவகார அமைச்சின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அதன் ஊடகப் பேச்சாளர் மாவோ நின்ங்(Mao Ning) இதனை தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலால் மாத்திரமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் வீதியில் இறங்கிப் போராடுவதால் அது சாத்தியமாகாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த ஜூலை மாதத்தில் பாராளுமன்றத்தை பாதுகாத்தமைக்காக முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள நாடுகளில் அராஜகம் தலைதூக்கும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, பாராளுமன்றம் இல்லாவிட்டால் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இல்லாமல் போகும் என சுட்டிக்காட்டினார்.
நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus உடனான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டை முன்னிட்டு ஜெனிவாவில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் கூறினார்.
இலங்கையில் அணுமின் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவுடன் கூடிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ரஷ்யா முன்வைத்துள்ளதாக இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டம் என இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் S.R.D. ரோஸா கூறியுள்ளார். அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நடவடிக்கை குழுவொன்றையும், 9 செயற்பாட்டுக் குழுக்களையும் நியமிக்க அமைச்சரவை கடந்த வாரம் தீர்மானித்தது.
அதிக கடன் சுமையை சந்தித்துள்ள நாடுகளுக்கு ஆக்கபூர்வமான முறையில் உதவுவதற்காக பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராகவுள்ளதாக சீன பிரதமர் Li Keqiang தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva உடன் தொலைபேசியில் நேற்றைய தினம் கலந்துரையாடிய போது, சீன பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.