இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. 2024 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்படவுள்ள இலங்கை – தாய்லாந்து இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த 27 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானது. Read more
முச்சக்கர வண்டி கட்டணம் நாளை (30) முதல் குறைக்கப்படவுள்ளது. போக்குவரத்துக் கட்டணத்தை இரண்டாவது கிலோமீட்டரில் இருந்து 80 ரூபா வரை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார். மீட்டர் அளவீட்டின் அடிப்படையில் கட்டணம் அறவிடும் முச்சக்கர வண்டிகள் பல்வேறு வகையான கட்டணங்களை அறவிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபன முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.
கழகத்தின் இராணுவப் பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட தோழர் காத்தான் (கிருஷ்ணசாமி கிருஷ்ணகுமார்) அவர்களின் 41 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் ஒலுமடுப் பிரதேசத்தினை அண்டிய வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமையை கண்டித்து நாளை மறுதினம் வியாழக்கிழமை (30.03.2023) காலை 9.30மணியளவில் வவுனியா கந்தசாமி கோயில் தொடக்கம் வவுனியா மாவட்ட செயலகம் வரையிலும் இடம்பெறவுள்ள கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் விடுத்துள்ள பகிரங்க அழைப்பிற்கு நாம் முழுமையான ஆதரவினை வழங்குகிறோம்.
வவுனியா கோவில்குளம் மாதர் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட மகளிர்தின விழாவில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தபோது….
முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார். 82 ஆவது வயதில் அன்னார் தனது இல்லத்தில் இன்று காலமானார். இலங்கை பாராளுமன்றத்தின் 17 ஆவது சபாநாயகராக ஜோசப் மைக்கல் பெரேரா செயற்பட்டார். 1964 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை ஜா-எல நகர சபையை பிரதிநிதித்துவப்படுத்திய அன்னார், அங்கு தலைவர் உள்ளிட்ட பல பதவிகளையும் வகித்திருந்தார்.
காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்குவதற்காக அமைச்சரவை மட்டத்திலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்காக காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் காணி உரிமைப் பத்திரங்களை வழங்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்தின் கூட்டு வர்த்தக நிறுவனமொன்றுக்கு திருகோணமலை – சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. சம்பூர் நிலக்கரி அனல்மின் உற்பத்தி நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்ட இடத்திலேயே, 135 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சின் செயலாளர் பன்கஜ் ஜேன் உள்ளிட்ட குழாத்தினரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். சூரிய சக்தியில் இயங்கும் 500 வீட்டு சமையல் சாதனங்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக லங்கா IOC அதன் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.