பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரானது’ எனப் பெயரிப்பட்டுள்ள இந்த சட்டமூலம், ஆங்கிலத்தில் எண்டி – டெரரிசம் (anti-terrorism) எனக் குறிப்பிட்பட்டுள்ளது. Read more
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (23) மேலும் வலுவடைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவீதம் மூலம் அறியமுடிகிறது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 311 ரூபா 26 சதமாகவும், விற்பனை பெறுமதி 328 ரூபா 60 சதமாகவும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்து வந்திருந்த போதிலும், கடந்த வாரம் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் தற்கொலைக்கு முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டதாக தி நியூ ஹியூமனிடேரியன் செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் குடியேற்றத் தடுப்புக் கொள்கைகளுக்கு எதிரான சமீபத்திய பின்னடைவாக, குடிவரவு அதிகாரிகளின் பராமரிப்பில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 200 ஆதரவற்ற சிறார்கள் தொடர்பான செய்தி வெளியாகியுள்ள நிலையில், இந்தச் செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் அலுவலக சேவை, நுகர்வோர் சேவை உள்ளிட்ட எந்தவொரு சேவையும் முன்னெடுக்கப்படாதென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்க இணை ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இன்று காசாளர் பிரிவு மூடப்படும் அதேநேரம் கட்டணப் பட்டியல் விநியோகமும் முன்னெடுக்கப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 2222 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், இன்று அவர்கள் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர். இதன்போது, அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தியவாறு சர்வதேசம் தங்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட புதுடெல்லியில் நேற்று(21) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளின் வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு புதிய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர் தர கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களின் இடமாற்றத்தினால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமானால், அது தொடர்பில் அதிபரால் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீட்டை விசேட மேன்முறையீட்டுக் குழுவின் மூலம் பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான கடன் உதவிக்கு நிறைவேற்றுக்குழு அனுமதியளித்துள்ள நிலையில், உடனடியாக 333 மில்லியன் டொலர் கடனை வழங்க முடியுமென சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. 48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ், 3 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு நேற்று (20) அங்கீகாரம் வழங்கியது.
இலங்கைக்கான கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதுவொரு நல்ல செய்தி என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ( Julie Chung) ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த தீர்மானமானது நாட்டின் பொருளாதார மீட்சிக்கான முக்கியமான நகர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) இன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின், சமூக மேம்பாட்டு பிரிவால், 19.03.2023 ஞாயிற்றுக்கிழமையன்று திருகோணமலை, பாலையூற்று, முருகன்கோவிலடி பகுதியில் வாழும், வறுமைக்கோட்டிற்கு கீழ்பட்ட குடும்பங்களைச் சார்ந்த சிறார்களின் கற்றல் நடவடிக்கையை மேம்படுத்தும் முகமாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.