காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர். Read more
இலங்கைக்கு நீடித்த நிதி வசதியின் கீழ் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. குறித்த அனுமதியினூடாக 07 பில்லியன் அமெரிக்க டொலர் வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விமான பயணச்சீட்டுகளுக்கான விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பயணச்சீட்டுகளை விநியோகிக்கும் நிறுவனங்களுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் மல்வத்தை கிராமத்தில் உள்ள பிரபல நான்கு விளையாட்டுச் சங்கங்கள் ஒன்றிணைந்து பிரதேசத்தில் நிகழும் மரண வீடுகளுக்கு இலவசமாக கூடாரங்களை வழங்குவதற்காக கூடாரங்களை தந்துதவமாறு கழகத்தின் அம்பாறை மாவட்ட நிர்வாகத்திடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு இணங்க பிரித்தானிய கிளை தோழர்கள் சோபிதன் ஊடாக ரூபா 100,000, தயாமயூரன் ஊடாக ரூபா 50,000 என மொத்தம் 150,000 ரூபாவில் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக மேற்படி கூடாரங்கள் இன்று (19.03.2023) வழங்கிவைக்கப்பட்டன.
ஜேர்மனியில் வசிக்கும் திருமதி தர்மினி சிவகுமாரன் அவர்களின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கழகத்தின் ஜெர்மன் கிளையின் அனுசரணையில் 50,000/- நிதியில் முல்லைத்தீவு (ரெட்பானா) வள்ளுவர்புரம் மகளிர் அமைப்புக்கு சுழற்சி முறைக் கடன் திட்டத்தின் அடிப்படையில் நிதியுதவியும், வள்ளுவர்புரம் கார்த்திகா முன்பள்ளியினுடைய விளையாட்டுப் போட்டிக்கான பதக்கங்கள் மற்றும் பரிசுப் பொருட்களும் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடக இன்று (19.03.2023) வழங்கிவைக்கப்பட்டன.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது. இதன் பராமரிப்புப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று((19) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று(19) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது.
திருகோணமலை – கோமரங்கடவல, திம்பிரிவெவ மற்றும் கிரிந்த பலாட்டுபான பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இந்த நில அதிர்வுகள் நாட்டின் அனைத்து நில அதிர்வு மானிகளிலும் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் அஜித் பிரேம தெரிவித்துள்ளார்.
சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய இதனூடாக எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து விசாரணை செய்வது மீண்டும் ஆராயப்படுமென எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை அறிக்கை –