31.05.1993இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் றொபேட் (குமாரசாமி கேதீஸ்வரன் – முள்ளிவாய்க்கால்), சூர்யா (க.ரவிச்சந்திரன் – சிதம்பரபுரம்), தம்பா (இ.இராஜேந்திரன்) – வவுனியா) ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று..
Posted by plotenewseditor on 31 May 2023
Posted in செய்திகள்
31.05.1993இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் றொபேட் (குமாரசாமி கேதீஸ்வரன் – முள்ளிவாய்க்கால்), சூர்யா (க.ரவிச்சந்திரன் – சிதம்பரபுரம்), தம்பா (இ.இராஜேந்திரன்) – வவுனியா) ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று..
Posted by plotenewseditor on 31 May 2023
Posted in செய்திகள்
மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பாகவும், மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இன்று (31.05023) காலை 9.30மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.Posted by plotenewseditor on 29 May 2023
Posted in செய்திகள்
வவுனியா மகாறம்பைக்குளம் தாஸ் நகர் விபுலானந்தர் முன்பள்ளியில் 28.05.2023 அன்று திரு. எஸ். சியோன் பெரேரா அவர்களின் தலைமையில் நடபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக திருமதி வி.சசிகலா (முன்பள்ளி கோட்ட இணைப்பாளர்), அயல் பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர் Read morePosted by plotenewseditor on 29 May 2023
Posted in செய்திகள்
போலி கடவுச்சீட்டினூடாக நாட்டிற்குள் பிரவேசித்து இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் எழுத்துமூல கோரிக்கையின் பிரகாரம் விடுவிக்கப்பட்டதன் பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை, சீன அரசாங்கத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரென தெரியவந்துள்ளது. சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிவித்தலினூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 May 2023
Posted in செய்திகள்
மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நதாஷா எதிரிசூரிய எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று(28) மாலை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 May 2023
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் இளவாலை வடக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சிர்த்தார்த்தன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன் போது இப்பகுதி விவசாயிகள் எதிர்நோக்கும் தனியார் கம்பனி ஒன்று எமது பிரதேசத்தில் இருந்து அதிகளவான கிணற்றில் இருந்து நீரை ஐஸ் உற்பத்திக்காக எடுத்து செல்வதால் தமது விவசாயக் கிணறுகள் அதிகளவாக நீர் மட்டம் குறைவதாகவும் எதிர்காலத்தில் உவர் நீராக மாறும் சாத்தியம் காணப்படுவதால் எமது பிரதேசம் கொடி முந்திரிகை செய்கையை அதிகளவான விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர்Posted by plotenewseditor on 28 May 2023
Posted in செய்திகள்
இராமேஸ்வரம் – தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு பாக்குநீரிணை ஊடாக இலங்கை சாரணர் ஒருவர் நீந்தி வந்துள்ளார். SEA OF SRILANKA எனப்படும் எமது கடல் மாசுபடுவதனை தடுக்கும் விழிப்புணர்வு நோக்குடன் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் சாரணர் அணியைச் சேர்ந்த ஜனாதிபதி சாரணர் தேவேந்திரன் மதுஷிகன் பாக்குநீரிணை ஊடாக தலைமன்னாரை வந்தடைந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 28 May 2023
Posted in செய்திகள்
வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று(27) நடைபெற்றது. வட மாகாணத்தில் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 May 2023
Posted in செய்திகள்
சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்ய விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு(27) நாடு திரும்பினார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். Read more
Posted by plotenewseditor on 27 May 2023
Posted in செய்திகள்
இலங்கையின் மூத்த இராஜதந்திரி கலாநிதி. ஜயந்த தனபால தமது 85ஆவது வயதில் இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று காலை 10 மணியளவில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more