அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடலின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள பிற நாடுகளுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை உருவாக்க தயாராகி வருவதாக தெ சட்டர்டே பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் கூட்டாட்சி அரசாங்கம் அவசர பிராந்திய பாதுகாப்பு அச்சங்களின் மத்தியில் இந்த முனைப்பை மேற்கொண்டு வருகிறது. Read more
06.05.2008 அன்று வவுனியாவில் மரணித்த கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், சிறந்த சமூக சேவையாளருமான தோழர் பவான் (கந்தையா செல்வராசா) அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று. இவர் வவுனியா எல்லைப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பதில் அரும்பணியாற்றினார். விடிவினை நோக்கி மக்களை அரசியல்மயப்படுத்துவதிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.
சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியொருவர் பதவி விலகிய பின்னர் ஆளுநர்கள் பதவி விலகுவது சம்பிரதாயபூர்வமானது என ஜனாதிபதி செயலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது பிரதமர் பதவி விலகிய பின்னர் அமைச்சரவை கலைவதற்கு இணையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.