அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். பொருளாதாரத்தில் அரசாங்கம் எதிர்பார்த்துள்ள இலக்கை அடைந்தால் அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். Read more
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரச ஊழியர்கள், நாளை(09) முதல் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை இன்று(08) வெளியிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறிதளவு_பணம்_அதிகமாக_கிடைக்கிறது_என்பதற்காக_உங்கள்_காணிகளை_மாற்று_சமூகத்தினருக்கு_விற்க_வேண்டாம்,……
பிரித்தானிய விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(08) நாடு திரும்பியுள்ளார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக ஜனாதிபதி பிரித்தானியா சென்றிருந்தார். இலண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நேற்று முன்தினம்(06) பிரித்தானிய மன்னராக மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு முடிசூடப்பட்டது.
வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், பாடசாலை வீதி , பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்டவரும், அமரர் தோழர் நியாஸ் (செல்வநாயகம் அம்பிகைபாலன்) அவர்களின் அன்புச் சகோதரியுமான தேவராஜா புவனநாயகி அவர்கள் 05-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இயற்கையெய்தினார்.