இலங்கையின் மூத்த இராஜதந்திரி கலாநிதி. ஜயந்த தனபால தமது 85ஆவது வயதில் இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று காலை 10 மணியளவில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more
26-04-2023 அன்று இயற்கையெய்திய, யாழ்ப்பாணம் சுருவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மகேஸ்வரி இரத்தினசபாபதி அவர்களின் (27.05.2023) 31ஆம் நாள் நினைவை முன்னிட்டு அவரது புதல்வரும், கழகத்தின் கனடா கிளை நிர்வாக உறுப்பினருமான தோழர் சங்கர் (விஜயசேகரன்) அவர்கள் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, வன்னிப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் நலன் சார்ந்த உதவிகளுக்கான இரண்டு இலட்சம் ரூபா (200,000/-) நிதியினை வழங்கியுள்ளார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் லண்டன் தோழர்கள் முகுந்தன் 50,000/- சிவபாலன் 20,000/-, சுவிஸ் தோழர் வசந்தன் 40,000/- என மொத்தம் ரூபா 110,000/- நிதியில் திருகோணமலை பாலையூற்று ரெட் டயமண்ட் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்வனவு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான பிரிவில் சோதனைகளை முன்னெடுப்பதில் விசேட அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்தது. நிதி அமைச்சினால் இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்தார். இதன்படி, சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.