உலகில் அதிக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 11 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 157 நாடுகளை உள்ளடக்கிய வகையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு, புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் Steve H. Hanke வௌியிட்ட வருடாந்த அறிக்கையிலேயே இந்த தரவுகள் வௌியிடப்பட்டுள்ளன. Read more
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எதிராக 77 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் சமர்ப்பித்தார்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகளே இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளின் மொத்த பெறுமதி எட்டரை கோடி ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வௌிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதால், அவர் வகித்த அமைச்சுகளின் பொறுப்புகள் பதில் அமைச்சர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி நாடு திரும்பும் வரை குறித்த இரு அமைசுகளின் பொறுப்புகளையும் பதில் அமைச்சர்கள் வகிக்கவுள்ளனர்.
சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(23) அதிகாலை பயணமானார். இந்த விஜயத்தின் போது சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் K.சண்முகம் உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சிங்கப்பூருக்கான ஒரு நாள் விஜயத்தின் பின்னர், ஜனாதிபதி நாளை(24) ஜப்பானுக்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவின் பாண்டிச்சேரி காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது. காரைக்காலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார். இந்திய மத்திய அரசாங்கத்தின் இறுதிக்கட்ட அனுமதி இதுவரை பெறப்படாததால் குறித்த கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பட்டார்.
வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட P.S.M.சார்ள்ஸ் தனது கடமைகளை இன்று(22) பொறுப்பேற்றார். வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட P.S.M.சார்ள்ஸை வரவேற்கும் நிகழ்வொன்று வவுனியாவில் இன்று(22) நடைபெற்றது. வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா நகர சபையின் அருகிலிருந்து A9 வீதியூடாக அவர் வாகனப் பேரணியாக அழைத்து வரப்பட்டார்.
21.05.2003இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் குமாரப்பெருமாள் பேரின்பம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளுக்கு அமைய பிரித்தானிய அரசாங்கம் செயற்படவேண்டும். அத்துடன் இலங்கையின் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும் என பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார செயலாளர் டேவிட் லாம்மி வலியுறுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
நாட்டில் இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும், இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.