பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவர் பதவியை நிரந்தரமாக ஒருவருக்கு வழங்காமல், தற்காலிகமாக ஒருவருக்கு வழங்குவது தொடர்பில் சர்வதேச பாராளுமன்ற சங்கத்திற்கு அறிவிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நேற்று (04) நடைபெற்ற தெரிவுக்குழு கூட்டத்தின் போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்ற நிதிக்குழுவின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கூறினார். Read more
05.05.1999இல் வவுனியாவில் மரணித்த பளை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தோழர் குணம் (வீரகத்தி குணரத்தினம் – திருநாவற்குளம்) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
கிளிநொச்சி – ஆனையிறவில் போலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபர்களிடமிருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 250 கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 27 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வௌிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையால், பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி நாடு திரும்பும் வரை அமுலாகும் வகையில், பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோன் கடமையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கிலாந்துக்கான விஜயம் மேற்கொண்டுள்ள காலப்பகுதியில் நிதி அமைச்சின் நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த பதவிப் பிரமாணம் இடம்பெற்றதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(04) அதிகாலை இங்கிலாந்திற்கு பயணித்துள்ளார். பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் மேலும் 8 பேர் நாட்டிலிருந்து பயணித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார். பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக, தேசிய மக்கள் சக்தியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி அடிப்படை விடயங்களை முன்வைப்பதற்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய கொள்வனவு ஆணைக்குழுவிற்கும் நிதி ஆணைக்குழுவிற்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய கொள்வனவு ஆணைக்குழுவின் தலைவராக W.சுதர்மா கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். வர்ணகுலசூரிய ஐவன் திசேரா, D.A.பியசிறி தரணகம, சுமந்திரன் சின்னகண்டு, A.G.புபுமு அசங்க குணவங்ஷ ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய விமானப்படைத் தளபதி Air Chief Marshal V.R.சௌத்ரி உறுதியளித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு இந்தியா தொடர்ச்சியாக வழங்கும் ஒத்துழைப்பிற்கு பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
தோழர் ஆனா (ராசலிங்கம் மகேஸ்வரன்)