இலங்கைக்கும் தென் கொரியாவிற்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். கொரிய விமான நிறுவனத்தினால் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். Read more
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவதை பிற்போடுவதற்கு ஆளுங்கட்சி இன்று தீர்மானித்தது. இன்று பாராளுமன்றத்தில் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளமையினால், வாக்கெடுப்பு இடம்பெறும் தினம் தொடர்பில் நாளை (22) நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானம் எடுப்பதாக சபை முதல்வர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.