இலங்கைக்கும் தென் கொரியாவிற்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.  கொரிய விமான நிறுவனத்தினால் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை பணியாளர்களை கொரியாவிற்கு அழைத்துச்செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தாமதமாகி வருவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிணங்க, எதிர்வரும் இரண்டு மாதங்களில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.