இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாகும். ”அவர்கள் அனைவரும் மனிதர்கள்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இம்முறை அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் 15 முதல் 64 வயதுக்குட்பட்ட 284 மில்லியன் மக்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். இது கடந்த 10 ஆண்டுகளில் 26 வீத அதிகரிப்பாகும். Read more
இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கை வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியுடன் நேற்று(25) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, சீன வௌியுறவு அமைச்சர் Qin Gang இதனை கூறியுள்ளார். இலங்கைக்கு இயலுமான வகையில் அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக சீன வௌியுறவு அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.