இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாகும். ”அவர்கள் அனைவரும் மனிதர்கள்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இம்முறை அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் 15 முதல் 64 வயதுக்குட்பட்ட 284 மில்லியன் மக்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். இது கடந்த 10 ஆண்டுகளில் 26 வீத அதிகரிப்பாகும்.

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவது அத்தியாவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.