எமது கட்சியின் மகளீர் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பும் முல்லைத்தீவு, குமுழமுனை, தண்ணீரூற்று அரிமத்தியா ஆலய மண்டபத்தில் இன்று பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தோழர்கள் த.சிவபாலன் (லண்டன்) மு.முகுந்தன் (லண்டன்) வி.ரட்ணகுமார் (சுவிஸ்) ஆகியோர் அனுசரணை வழங்கியிருந்தார்கள்.
29.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் இராமநாதன் (பிச்சறால் இராசேந்திரன்- உவர்மலை), சேகர் (சித்திரவேல் செல்வராஜா- செட்டிக்குளம் ) ஆகியோரின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
700 மில்லியன் டொலர் நிதியை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது. இதற்கு உலக வங்கியின் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைத்துள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைபேறுதன்மையை கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்கு குறித்த நிதியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக R.M.A.L. ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளராக செயற்பட்டிருந்தார் M.A. பத்மசிறி, சந்திரவங்ச பெரேரா , அமீர் மொஹமட் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் L.T.B. தெஹிதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.