700 மில்லியன் டொலர் நிதியை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது. இதற்கு உலக வங்கியின் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைத்துள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைபேறுதன்மையை கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்கு குறித்த நிதியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வறுமையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுத்தல், தனியார் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கள், நிதி மறுசீரமைப்பை திட்டமிடல் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்புகளை வழங்கும் நோக்கிலும் இந்த நிதி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.