சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாடு நாளை(15) ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெறவுள்ளது. அத்தியாவசிய நிதிகளின் அடுத்த தவணையை பெற்றுக்கொள்வது மற்றும் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்தல் தொடர்பில் அந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதனடிப்படையில் பொருளாதார நிலைப்பாடு, நிலையான வளர்ச்சி, கடனிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது மற்றும் இலங்கை பிரஜையின் பொருளாதாரம் மற்றும் நலனை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

பங்குதாரர்கள் மற்றும் கூட்டு பிரயத்தினத்தின் ஊடாக இலங்கையை விட விரைவான பொருளாதார அபிவிருத்தியை கைப்பற்ற முடியும் என அரசாங்கம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் நாளை ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் ஊடாக இது சாத்தியமாகும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.