கடந்த மாத இறுதியில் லண்டனில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அரசாங்கத்துக்கும் சர்வதேச கடன் பத்திரதாரர்களுக்கும் இடையில் 2 விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எஞ்சியுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக அவர் தெரவித்துள்ளார்.

இதன்போது, சாதகமான முடிவுகள் எட்டப்படும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.