இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு விசாரணைகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறித்த வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வழக்கு மீதான விசாரணைகள் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது அதன் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் பொதுச் செயலாளராக ச.குகதாசனும் தெரிவு செய்யப்பட்டனர். Read more
24.04.1984ல் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் மரணித்த பொதுவுடைமைவாதி, காந்தீய செயற்பாட்டாளர், ‘விடுதலை’ இதழாசிரியர், கழகத்தின் தளபதி தோழர் பார்த்தன் (இராஜதுரை ஜெயச்சந்திரன்) அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
இலங்கைக்கு வருகைதந்த ஈரானிய உள்துறை அமைச்சரை கைது செய்ய வேண்டும் என ஆர்ஜென்டினா கோரியிருந்த நிலையில், குறித்த அமைச்சர் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸியுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை என ஏஎஃப்பி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. 1994ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவின் தலைநகரில் யூத சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் தற்போதைய உள்துறை அமைச்சர் அஹமட் வஹ்டியே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் 05 புரித்துணர்வு ஒப்பந்தங்களை கைசாத்திடத் தீர்மானம்.