பொலன்னறுவை மாவட்டத்தின், ஹபரண – மட்டக்களப்பு A11 வீதியில் அவதானத்துடன் காணப்படும் இடமாக அடையாளம் காணப்பட்ட படுஓயா பாலம் உட்பட சிறிய பாலங்கள் சில போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தனது விசேட அவதானத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 2019இல் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் இப்பாலத்தை நிருமாணிப்பதற்குப் பொறுப்பெடுத்த கம்பனி 2021 இல் மாத்திரம் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டு அங்கு நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டன. Read more
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் துணை அமைச்சருமான சன் ஹையான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோரினதும், சீன தூதுக்குழுவின் அதிகாரிகளினதும் பங்குபற்றுதலுடன் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று காரைநகர் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் காவல்துறையினர் முன்னெடுத்த சோதனையின்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை – பொன்னாலை பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில்இ இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
உலகளாவிய தென் பிராந்திய நாடுகள் தங்கள் சொந்த பலத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக ஆர்வம் காட்டுகின்ற தரப்பினர்களிடமிருந்து விருப்புக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 2023.01.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விருப்புக் கோரல்கள் பெறப்பட்டுள்ளதுடன், 5 நிறுவனங்கள் விருப்புக் கோரல்களைச் சமர்ப்பித்துள்ளன.
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.