இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நால்வரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கட்டார், துருக்கி, லக்ஸம்பேர்க் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இலங்கையுடனான தமது நாடுகளின் நீண்டகால தொடர்புகளை புதிய துறைகளின் ஊடாக மென்மேலும் விருத்தி செய்வதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக புதிய இராஜதந்திரிகள் உறுதியளித்துள்ளனர்.

இராஜதந்திரிகளின் விவரம்

ஜாஸ்ஸிம் பின் ஜாபிர் ஜாஸ்ஸிம் சரூர் – கட்டார் நாட்டின் தூதுவர்

ரகிபே டிமெட் செகெர்சியோக்ளு – துருக்கி குடியரசின் தூதுவர்

ஜீன் க்ளோட் குகேனர் – லக்ஸம்பேர்க் நாட்டின் தூதுவர்

கலாநிதி மர்ஜன் சென்சென் – ஸ்லோவேனியா குடியரசின் தூதுவர்

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கடாக் – பாகிஸ்தான் குடியரசின் உயர்ஸ்தானிகர்.