 குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியுமான சானி அபேசேகரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நடத்திய தொலைப்பேசி உரையாடல்கள் குறித்து விசாரணை நடத்தி அது குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சமர்பிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு, பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவிற்கு கடந்த எழாம் திகதி உத்தரவிட்டது. எனினும் குறித்த அறிக்கையை சமர்பிக்க மேலும் கால அவகாசம் தேவை என பதில் பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டதற்கு அமைய பொலிஸ் ஆணைக்குழு மேலும் இரண்டுவார கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவுடன் நடத்திய சர்ச்சைக்குரிய தொலைப்பேசி உரையாடல்களை மையமாகக் கொண்டு சானி அபேசேகர கடந்த எழாம் திகதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சானி அபேசேகரவின் நடவடிக்கையால் பொலிஸ் சேவைக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.