நாளொன்றுக்கு 6 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொவெக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கவுள்ள தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றை தவிர 9 மில்லியன் மக்களுக்கு ஏற்றுவதற்காக 18 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளாக அவர் கூறினார்.

அடுத்தகட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டின் போது ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.