இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக, இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிக்குமாறு, ஐ.நா உறுப்பு நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில், காணொளி மூலம் நேற்று(23) உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
அத்துடன், இலங்கை மீதான சகல குற்றச்சாட்டுகளையும் நீக்கிக்கொள்ளுமாறு அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.