முல்லைத்தீவு வற்றாப்பளை, நாவற்காடு, முள்ளியவளை ஆகிய இடங்களில் முன்பள்ளி சிறுவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சுவிஸ் கிளை ஊடாக வழங்கிய நிதியில் இவ்வுதவி வழங்கப்பட்டது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளர் க.சிவநேசன்(பவன்), கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் யூட்சன், முன்பள்ளிகளின் தலைமை ஆசிரியை மலர்ச்செல்வி, முன்பள்ளிகளின் ஆசிரியைகள் மற்றும் முன்பள்ளி சிறுவர்களின் பெற்றோர்கள் இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது வற்றாப்பளை கேதீஸ் முன்பள்ளியைச் சேர்ந்த 19 பிள்ளைகளுக்கும், நாவற்காடு சந்திரன் முன்பள்ளியைச் சேர்ந்த 10 பிள்ளைகளுக்கும், முள்ளியவளை
ஐயனார் முன்பள்ளியைச் சேர்ந்த 20 பிள்ளைகளுக்குமாக மொத்தம் 49 பிள்ளைகளுக்கு புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்பட்டன.
முள்ளியவளை
ஐயனார் முன்பள்ளியில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட மகளிர் அமைப்பு தலைவி, செயலாளர், உபசெயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
மேலும், அமரர் வை.விஜயநாதன் அவர்களின் நினைவாக தண்ணீரூற்று வித்தியா கல்வியகத்தில் பயிலும் பிள்ளைகளின் பாராட்டு விழாவிற்காக ரூபா 5000/= நிதியுதவியும் வழங்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 