2028ஆம் ஆண்டளவில் கண்ணிவெடி மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லாத நாடாக இலங்கையை மாற்றவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் சுமார் 23 கிலோமீற்றர் நிலப்பரப்பிலே கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதன் மூலம் பொதுமக்களின் எதிர்கால பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய கண்ணிவெடி அகற்றும் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.