Header image alt text

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்தவின் நினைவு தினம்-

vasandaசிரேஷ்ட ஊடகவியலாளரும் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க கொலைசெய்யப்பட்ட ஐந்தாண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டக்கப்பட்டது. அன்னாரது நினைவு தினத்தை முன்னிட்டு விசேட அஞ்சலி வைபவமொன்று கொழும்பு பொரளை பொது மயானத்தில் அமைந்துள்ள அவரது சமாதியின் முன்பாக இடம்பெற்றது. லசந்த விக்கிரமதுங்க 2009ஆம் ஆண்டு, ஜனவரி 8ம்திகதி காலை தனது அலுவலகத்திற்கு செல்லும் வழியில் கல்கிஸ்சையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இதனை நினைவுகூறும் பொருட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள், பொரளையில் உள்ள லசந்தவின் சமாதியின் முன் உருவப் படமொன்றை வைத்து மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செய்துள்ளனர்.

கொழும்பில் காணாமல்போன வர்த்தகர் வீடு திரும்பினார்-

imagesCA4W14EAநேற்று முன்தினம் காணாமற் போனதாக கூறப்பட்ட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சங்கரலிங்கம் (வயது 52) என்ற வர்த்தகர் இன்று வீடு திரும்பியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு, மெயின் ஸ்ரிட் பகுதியில் இறக்குமதி வியாபரத்தில் ஈடுபட்டுவந்த சங்கரலிங்கம், வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்காக நேற்று முன்தினம் மதியம் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என தெரிவில்லை எனவும் அவரது மனைவி, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு அவர் வீடு திரும்பியுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  தான் கடத்தப்பட்டமை தொடர்பில் சங்கரலிங்கம் கூறுகையில், Read more

கல்விளானில் மாலைநேர பஜனைப் பாடசாலை ஆரம்பித்து வைப்பு-

unnamed (8)யாழ். வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி அவர்களது வலி மேற்கு பிரதேசத்தில் 100 மாலைநேர பஜனைப் பாடசாலைகளை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் இரண்டாவது பாடசாலை சுழிபுரம் கல்விளான் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நேற்றுமாலை (07.01.2014) 5மணியளவில் சுழிபுரம் கல்விளான் காந்திஜி சனசமூகநிலையத்தில் காந்திஜி சனசமூகநிலைய தலைவர் ப.அன்னலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக சர்வதேச இந்து குருமார் ஒன்றியத் தலைவர் சபா வாசுதேவ குருக்கள், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ..சரவணபவன், வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

இந்திய வீட்டுத்திட்ட மூன்றாம் கட்டத்தில் மலையக மக்களுக்கும் பயன்-

3இந்திய வீட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹா தெரிவித்துள்ளார். இதில் மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டமும் அடங்கும் என இந்திய ஊடகம் ஒன்றிற்கு அவர் கூறியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட வீட்டுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது. இரண்டாம் கட்டத்தில் வட கிழக்கில் 10,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு இவ்வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டப் பணியில் 16,000 வீடுகள் கட்டப்படவுள்ளன. அதில் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் நேரடி பயன்பெறுவர். இலங்கை அரசுடன் ஆராய்ந்து தெளிவாக பயனாளிகள் தெரிவு செய்யப்படுகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாளொன்றுக்கு ஐந்து குழந்தைகள் துஸ்பிரயோகம்-

imagesCAVGQCEMஇலங்கையில் நாளொன்றுக்கு ஐந்து பெண் குழந்தைகள் வரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் 84 வீதமான பாலியல் வன்கொடுமைகளால் 18 வயதுக்கும் குறைந்த பெண் பிள்ளைகளே அதிகமாக பாதிக்கப்படுவதாக கொழும்பு, ஜயவர்தனபுர பல்கலைக்கழகப் பேராசிரியர் தேவிகா ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இதேவேளை இணையம் கைத்தொலைபேசி போன்றவற்றின் பாவனையின் காரணமாக பெண்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆபாச இணையதள பயன்பாட்டில் இலங்கை உலக அளவில் முன்னணி வகிக்கும் நிலை ஏற்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும். ஆகவே துஸ்பிரயோகம் ஏற்படுவதை குறைக்க பெற்றோர்கள் பிள்ளைகளில் கூடிய கரிசனை காட்ட வேண்டும் என பேராசிரியர் தேவிகா ஜயதிலக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிரந்தர நியமனம் கோரி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு-

vavuniyaநிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வவுனியாவில் நேற்று அமைய ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, செட்டிக்குளம், நெடுங்கேணி பிரதேச சபை ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்கள் தமது அலுவலகங்களின் முன்னால் நின்று இந்தப் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா நகரசபையின் முன்பாக அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்க வவுனியாக் கிளையினர் மூன்று முக்கிய கோரிக்கையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில் சுமார் 120பேர் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஊழியர்கள் தமது அலுவலகத்தின் முன்பாகத் தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் நெடுங்கேணி, செட்டிக்குளம் பகுதிகளில் இயங்கும் பிரதேச சபைகளைச் சேர்ந்த ஊழியர்கள் தத்தமது காரியாலயங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேல், தென் மாகாணங்களில் பிரபலங்களை களமிறக்க முஸ்தீபு-

பதவிக்காலம் முடியும் முன்னர் மேல் மற்றும் தென் மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ள நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்பன பிரபல்யங்களையும் தேசிய மட்ட அரசியல்வாதிகளின் நெருங்கிய உறவினர்களையும் வேட்பாளர்களாக நிறுத்த ஆயத்தம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தபாலத்துறை அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மகள் மல்ஷா குமாரதுங்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் போட்டியிடுவார் என தெரியவந்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம மற்றும் விசேட செயற்றிட்ட அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள் அரசாங்கப் பட்டியலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடவைக்க திட்டமிடுகின்றனர். இம்முறை பல புதுமுகங்களை அறிமுகம் செய்யப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். ஜே.வி.பியும் சில புதியவர்களை போட்டியில் நிறுத்தவுள்ளதாக கூறியுள்ளது.

இலங்கையர்களுக்கு இந்தியப் பிரஜா உரிமை –

raviஇந்தியாவில் வாழும் இலங்கையர்களுக்கு இந்தியப் பிரஜா உரிமை வழங்க வேண்டும் என கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ.ஸ்ரீ ரவிசங்கர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். இதன் முதல்கட்டம் பாண்டிச்சேரியில் நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கை சகல இன மக்களிடமும் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பல வருடங்களாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்hளர்.

15ஆயிரம் சாரதிகள் தவறிழைப்பு-

கடந்த ஆண்டு போக்குவரத்து நடவடிக்கைகளின்போது தவறிழைத்த 15,000 சாரதிகளின், சாரதி அனுமதிப்பத்திரத்தில், இலக்கமிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தினால் குற்றவாளி என அடையாளம் காணப்படும் சாரதிகளின், சாரதி அனுமதிப்பத்திரத்தில் இலக்கமிடப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எச்.எஸ்.ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார். மதுபோதையில் வாகனம் செலுத்துதல், விபத்துக்கள் இடம்பெறும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய வாகன சாரதிகளின், சாரதி அனுமதிப்பத்திரத்தில் இலக்கமிடும் நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி 24 புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் சாரதிகளின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படவுள்ளன.

கொழும்பில் வர்த்தகரை காணவில்லையென முறைப்பாடு-

LK policeகொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் காணாமற்போன சம்பவம் தொடர்பான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த வர்த்தகர், நேற்று முன்தினம் முதல் காணாமற்போயுள்ளதாக அவரது மனைவியினால் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, கொட்டாஞ்சேனை பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு பிரதான வீதியிலுள்ள கிழங்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனமொன்றில் கடமையாற்றி வந்த இரு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய அருணாசலம் சங்கரலிங்கம் என்ற வர்த்தகரே காணாமற்போயுள்ளார். கடமை நிமித்தம் நேற்று முன்தினம் அரச வங்கியொன்றுக்கு சென்ற குறித்த வர்த்தகர் பணத்தை மீளப் பெற்றுள்ளதாகவும், அதன்பின்னரே அவர் காணாமற் போயுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மரணதண்டனை இருபது ஆண்டு சிறைத் தண்டனையாகிறது-

law helpமரணதண்டனை இனி வரும் காலங்களில் இருபது ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் நீதி அமைச்சருடன் கலந்தாலோசித்து மரண தண்டனையை இனிவரும் காலங்களில் இருபது ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் சுமார் 500பேர் இலங்கைச் சிறையில் மரண தண்டனை அனுபவித்து வருகின்றனர்.