சங்கானை சரன்னிய அச்சக அனுசரணையுடன் வெளியீட்டு வைபவம்-
சர்வதேச இந்து குருமார் ஒன்றியம் சங்கானை சரன்னியா அச்சக அனுசரணையுடன் இன்றையதினம் (09.01.2014) மதியம் 12.30அளவில் ஓம் நமச்சிவாய பிரார்த்தனை சிவலிங்க திருவுருவ மந்திர லிகிதஜப பத்திரம் வெளியீட்டு வைபவமும் பிரார்த்தனையும் யாழ். சித்தன்கேணி ஸ்ரீசிவசிதம்பரேஸ்வரர் தேவஸ்தான மண்டபத்தில் சர்வதேச இந்து குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ. சபா.வாசுதேவ குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் .ஈ.சரவணபவன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக சிவஸ்ரீ.ந.பிரசாந்த குருக்கள் (பிரதம குரு உடுக்கியவளை பிள்ளையார் கோவில்), வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், வலி மேற்கு பிரதேச கலாச்சார உத்தியோகஸ்தர் திருமதி காசிநாதன் நிருபா, வலி மேற்கு பிரதேச இந்து சமய கலாச்சா அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி ஜனார்த்தனன் அகல்யா, வலி மேற்கு பிரதேச கலாச்சார அபிவிருத்தி உதவியாளர் திரு பொன்னுத்துரை. சந்திரவேல், வலி மேற்கு பிரதேச முன்பள்ளி இனைப்பாளர் செல்வி நா.நிரஞ்சன, சித்தன்கேனி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் தேவஸ்தான பரிபாலன சபை தலைவர் திரு தி.இராஜ்குமார், சங்கானை வர்த்தக சங்க தலைவர் திரு.ஆ.குலசேகரம், இந்து மகாசபை உறுப்பினர் திரு.அ.சிவானந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வானது. இந்து ஆலயங்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவும் ஆலயங்களில் இடம்பெற்றுவரும் திருட்டுச் சம்பஙவங்கள் இல்லாது போக்குவதற்கும் மக்களின் வாழ்வு சுபீட்சமடையவும் நடாத்தப்பட்டுள்ளது.
பிரமாண்டமான மீன்சந்தை அமைக்க வலிமேற்கு பிரதேச சபை நடவடிக்கை-
யாழ். வலி மேற்கு சங்கானைப் பகுதியில் பல மில்லியன் செலவில் பிரமாண்டமான மீன் சந்தை ஒன்று அமையவுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையானது தனது வருமானத்தில் பெரும் பங்கினை சங்கானை பகுதியின் வாயிலாகவே பெற்று வருகின்றது இந்நிலையில் புறநெகும திட்டத்தின்கீழ் பல மில்லியன் ருபா செலவில் பிரமாண்டமான மீன்சந்தை சங்கானையில் புதிய இடத்தில் அமையவுள்ளது.
ஏற்கனவே சங்கானைப் பகுதியில் காணப்படும் மீன் சந்தையானது சங்கானை பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ளது. இதேவேளை அருகில் இந்து ஆலயம் கடைத்தொகுதிகள் மற்றும் பிரதேச சபை நூலகம் என்பன அமைந்துள்ளன. இந்நிலையில் சங்கானைப் பகுதி பொது அமைப்புகள் மற்றும் அரச நிறுவனங்கள் என்பவற்றால் இவ் சந்தைப் பகுதியை மாற்றுமாறு வலி மேற்கு பிரதேச சபை தவிசாளா திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது
இதனைத் தொடர்ந்து சங்கானைப் பகுதி பொது அமைப்புகள் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர்ருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து சங்கானைப் பகுதி பொது அமைப்புகள் சங்கானை பிரதேச செயலகத்தின் பின்புற பகுதியில் உள்ள காணியை கொள்வனவு செய்து வலி மேற்கு பிரதேச சபைக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானைப் பகுதி பொது அமைப்புகளுடன் கடந்த மார்கழிமாதம் பலசுற்று பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு திட்டம் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்றையதினம் (08.01.2014) கட்டிடம் அமையப்பெற உள்ள பிரதேசத்தை வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் முதலமைச்சர் அலுவலக உத்தியேகஸ்தர்கள், வலி மேற்கு பிரதேச சபை தவிசாளா திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், வலி மேற்கு பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், சங்கானை பிரதேச செயலர் திரு சோதிநாதன், சங்கானைப் பகுதி பொது அமைப்புகள் பிரதிநிதிகள் பார்வையிட்டுள்ளனர்.