Header image alt text

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும்-தருஸ்மான்-

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படிப்படியாக நீதி கிடைக்கும் என்று, இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் தலைவர் மர்சூக்கி தருஸ்மான் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இன்னர் பிரஸ் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு தயாரித்த அறிக்கை ஒன்று ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்த குழு மேற்கொண்ட விசாரணை வெற்றிகரமானது என்று கருத முடியுமா? என்று தருஸ்மனிடம் வினவியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். கம்போடிய மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டது. ஆனால் அது படிப்படியாக கிடைத்துள்ளது என்று அவர் மறைமுகமாக இதன்போது பதிலளித்துள்ளார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சமூக தீர்வு காணப்படும் – ராஜ்நாத் சிங்-

xஇலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பதே தமது நோக்கம் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இந்திய மக்களவைத் தேர்தலின் ஆறாம்கட்ட வாக்குப் பதிவு அடுத்த வாரம் தமிழகத்தில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் திருச்சியில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றப்போவதில்லை. அயோத்தியில் இராமல் கோயில் கட்டப்படவுள்ளது, தமிழக மீனவர்கள் மாத்திரமல்லாது இந்திய மீனவர்கள் அனைவரது நலனையும் கருத்திற்கொண்டு தேசிய மீனவர் நல ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது. இம்முறை மக்களவைத் தேர்தலில் தமது கட்சி 300ற்கும் மேற்பட்ட ஆசங்களை கைப்பற்றி வெற்றிவாகை சூடும். நரேந்திர மோடி அடுத்த பிரதமராக பதவியேற்பார். புதிய அரசை உருவாக்க அ.தி.மு.க, தி.மு.க அல்லது வேறு கட்சிகளின் தயவு தேவைப்படாது என பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆஸியில் இலங்கை அகதிகளின் உரிமை மறுப்பு-

australiaஅவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் தமது அடிப்படை ஜனநாயக மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு, அவுஸ்திரேலிய அரசாங்கம் தடைவிதித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி அங்குள்ள இலங்கை அகதிகள் தங்களை நேர்மையான அகதிகள் என்பதை நிரூபித்து அகதி அந்தஸ்தினை பெற்றுக்கொள்ள சட்டரீதியான மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சோசலிச நிபுணர்களின் இணையத்தளம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த மாதம் அங்குள்ள அகதிகள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு தடை விதித்திருந்தது. இதன்மூலம் அகதிகளின் பாதுகாப்பு வீசாவுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அகதிகள் மேற்கொள்ள வேண்டிய சட்ட நவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இது சர்வதேச அகதிகள் சட்டத்துக்கு எதிரானது என்று அந்த இணையத்தளம் மேலும் சுட்டிக்காட்டியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடற்படையினரால் முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயரவில்லை – பாதுகாப்பு அமைச்சு-

கடற்படையினர் முகாம்கள் அமைத்தமையால் முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயரவில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வில்பத்து வனப் பகுதியில் குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் கடற்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டமை காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் என சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இக் குற்றச்சாட்டை இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய நிராகரித்துள்ளார். முள்ளிக்குளம் மற்றும் மரிச்சுக்கட்டி ஆகிய பகுதிகளில் கடற்படையினர் முகாம்களை அமைத்த காரணத்தினால் ஒரேயொரு முஸ்லிம் குடும்பம் மட்டுமே இடம்பெயர்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த அந்த குடும்பம் வில்பத்து வனப் பகுதியில் குடியேறவில்லை என அவர் கூறியுள்ளார். கடற்படையினர் தமது காணிகளை சுவீகரித்தமையால் வில்பத்து வனப்பகுதியில் குடியேறியுள்ளதாக முஸ்லிம்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், கடற்படையினர் குறித்த முஸ்லிம் குடும்பங்களின் காணிகளை சுவீகரிக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பி.பி.சி செய்தியாளரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு-

imagesபி.பி.சி செய்தி சேவையின் இலங்கைக்கு செய்திகளுக்கு பொறுப்பான ஊடகவியலாளர் சார்ள்ஸ் ஹெவுலனுக்கு அரசாங்கம் வழங்கிய இரண்டு வருடத்திற்கான வீசா அனுமதி நீடிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் காலவதியாகவும் அவரது வீசா அனுமதியை புதுப்பிக்க அவர் விண்ணப்பித்திருந்த போதிலும், வரகக 3மாத வீசாவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அமைச்சின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதேவேளை, மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் வீசா அனுமதி முடிவடைந்த பின்னர், அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வருடம் 2,700 தற்கொலைகள்-

இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 2,700 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 80 வீதமானவர்கள் ஆண்கள் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார். கடந்த வருடம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவர்கள் தொடர்பான தகவலே அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கதிர்காமம் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு-

yகொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் கதிர்காமம் நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். கதிர்காமம் நகருக்கு அருகில் உள்ள தெட்டுகம வாவியில் வேன் ஒன்று வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இன்றுகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 3 பெண்களும் 2 ஆண்களுமே பலியாகியுள்ளனர். சம்பவத்தில் 7வயது சிறுவன் காயமடைந்த நிலையில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கண்டி, அம்பதென்ன பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்கு இலக்காகியுள்ளனர்.

அமெரிக்க விளையாட்டுத்துறை தூதுவர்கள் விஜயம்-

அமெரிக்காவின் இரண்டு விளையாட்டுத்துறை தூதுவர்கள் இலங்கை;கு விஜயம் செய்யவுள்ளனர். தாமிக்கா வில்லியம்ஸ் மற்றும் எட்னா கெப்பெல் ஆகியோரே இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அமெரக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்கள் எதிர்வரும் 21ம் திகதிமுதல் 25ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த காலப்பகுதியில் கொழும்பு காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மகளிர் விளையாட்டுக் கழக உறுப்பினர்களை சந்தித்து, பல்வேறு பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

மாங்குளத்தில் குண்டு மீட்பு-

மாங்குளம் திரிபுரம் பகுதியிலுள்ள காணியொன்றின் கிணற்றிற்கு அருகில் ஆர்.பி.ஜி. ரக குண்டொன்று மீட்கப்பட்டதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வளவின் உரிமையாளர் கொடுத்த தகவலிற்கமைய அவ்விடத்திற்கு இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று அக்குண்டை வெள்ளிக்கிழமை செயலிழக்கச் செய்ததாக மாங்குளம் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 64வயது மூதாட்டி கைது-

கிளிநொச்சியில் 64 வயதுடைய மூதாட்டியொருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்றுகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்மாவதி எனும் மூதாட்டியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் மூதாட்டியை வவுனியாவுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அண்மைக்காலமாக புலிகளை மீள் உருவாக்க முயற்சி செய்கின்றனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் பல பொதுமக்களை பாதுகாப்பு தரப்பினர் கைதுசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்விழான் காந்திஜி சனசமூக நிலையத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு-

annar news-annar-யாழ். சுழிபுரம் கல்விழான் காந்திஜி சனசமூகநிலையத்தில் பிரதேச மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 14.04.2014 அன்று திங்கட்கிழமை காந்திஜி சனசமூக நிலையத்தலைவர் திரு அன்னலிங்கம் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமண்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந் நிகழ்வில் சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரியின் இளைப்பாறிய முன்னாள் அதிபர், சுழிபுரம் ஐக்கிய சங்க இளைப்பாறிய அதிபர், சுழிபுரம் காட்டுப்புலம் அதிபர் திரு.ச.பலகுமார் அவர்களும் கிராமசேவகர் திரு சிறீரஞ்கன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். இந் நிகழ்வில் காந்திஜி சனசமூக நிலையத் தலைவர் திரு அன்னலிங்கம் அவர்கள் உரையாற்றும்போது, இக் கிராமம் கல்வியில் பின்தங்கி உள்ளது. கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். இன்று உலகம் எங்கோ வளர்ந்து விட்டது. இந்த கிராமத்திலலிருந்து இதுவரை ஒருவர் கூட அரச உத்தியோகத்திற்கு செல்லவில்லை. எமது இப் பிரதேச கல்வியில் எமது பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஐங்கரன் அவர்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றார். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவும் எமது பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அவர் வழங்கியுள்ளார். அத்துடன் இப்பகுதி மாணவர்கள் இரவு நேரங்களில் Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு-

1719856666tna3நாளை நடைபெறவிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெறவிருந்த இந்த கூட்டம், திருகோணமலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் அடுத்தமாதம் முற்பகுதியில் இக்கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும், இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அண்மைய தென்னாப்பிரிக்க விஜயம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிமேற்கு பிரதேசசபை தவிசாளரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி-

Valikamam_West_Divisional_Councilபுத்தாண்டென்பது பூமி சூரியனை சுற்றி மீண்டும் அடுத்த சுற்றில் பிரவேசிக்கும் தொடக்க நாள் ஆகும். இந்த வகையில் இதுவரையில் பட்ட துன்பங்களையும் வடுக்களையும் வரலாற்றின் வழிகாட்டியாக கொண்டு தழிழ் மக்களாகிய நாமும் புதிய சாதனைகளை படைத்து வலி தந்தவர்களை தோற்கடிக்க புறப்படும் புதிய நாளாக மனதிற் கொண்டு மகிழ்வுடன் வரவேற்க தயாராக வேண்;டும். வரலாற்றில் உலகில் வளர்ச்சி அடைந்த பல சமுதாய கட்டமைப்புக்களில் காலத்தினை கணிப்பீடு செய்ய பல காலக்கணிப்பீட்டு முறைகள் இருந்துள்ளன. இவற்றில் பல கணிப்பீட்டு முறைகள் இன்று செல்வாக்கு இழக்கப்பட்டு விட்டது. சில வேண்டும் என்றே அழிக்கப்பட்டு விட்டது. ஆயினும் தழிழர்களாகிய எமது காலக்கணிப்பீட்டு முறை இன்றும் எவராலும் அழிக்கப்படமுடியாத ஒன்றாகவே நிலை பெற்றுள்ளது. இது எமது இனத்தின் மாபெரும் அடையாளம் ஆகும். இதன் பிரகாரம் மலரும் சித்திரை புத்தாண்டானது தமிழ் மக்களது துன்பஙகள் துயரங்களை துடைத்தெறியும் நல் ஆண்டாக மலரவும் இதுவரை காலமும் இழந்த பலவற்றிற்கான பலன்களை அறுவடைசெய்யும் நல் ஆண்டாகவும் மாற்றமுறவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

புதிய உயர்ஸ்தானிகர்கள் நியமனம்-

sri &indiaஇந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பேராசிரியர் சுதர்ஷன் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இலங்கை உயர்ஸ்தானிகராக இருந்த பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஜெர்மன் நாட்டுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் யுவதி கொலை, சிவில் பாதுகாப்பு படையினருக்கு விளக்கமறியல்-

12887486002109922332law02கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் யுவதி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான சிவில் பாதுகாப்பு படைவீரரை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் சி. சிவசுப்பிரமணியம் முன்னிலையில் சந்தேகநபர் இன்றுகாலை ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாத்தளையைச் சேர்ந்த 28 வயதான யுவதி ஒருவர் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சி புன்னைநீராவி பகுதி கிணற்றில் இருந்து, கழுத்தில் வெட்டுக் காயங்களோடு சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவர் சந்தேகநபருடன் கொண்டிருந்த காதல் தொடர்பினால் கர்ப்பமுற்றிருந்தார் எனவும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தும் நோக்கில் கிளிநொச்சி சென்றிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அத்துடன் சம்பவ இடத்திற்கு அருகில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புப் படை முகாமில் கடமையாற்றிய படைவீரர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைதுசெய்ததுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்தி ஒன்றையும் கைப்பற்றியிருந்தனர்.

பொலன்னறுவையில் பாரிய விபத்து; 9 பேர் பலி-

925635413accsi.Crash-Generic-300x225பொலநறுவை மாவட்டம் அரலகங்வில அளுத்ஒயா பகுதியிலுள்ள இசெட் ஈ வாய்க்காலுக்குள் லேண்ட் மாஸ்டர் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பகல் 12.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும், இரண்டு ஆண்களும், இரண்டு சிறுவர்களும் சிறுமி ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களுடன் நீரில் மூழ்கிய மேலும் எட்டு பேர் காப்பாற்றப்பட்டு அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தெஹியத்தகண்டிய, நிக்கவத்த, லந்த பகுதியிலிருந்து அரலகங்வில செவனபிட்டிய பகுதிக்கு சென்றுகொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

டிபெண்டர் வாகனம் விபத்து, இரு கடற்படையினர் பலி-

திருகோணமலை புடவைக்கட்டு மதுரங்குடா பிரதேசத்தில் சென்றுகொண்டிருந்த கடற்படையினரின் டிபென்டர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு கடற்படையினர் மரணமடைந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் உள்ள பள்ளங்களில் வாகனத்தை விழவிடாது காக்க முற்பட்டபோதே திடீரேன வாகனம் நடுவீதியிலேயே தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடியவன் உள்ளிட்ட 96 பேரை கைது செய்ய இன்டர்போலின் உதவிகோரல் கே.பி பெயர் இல்லை  

untitledநெடியவன் உட்பட 40பேர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர்களும், ஏனைய  பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் 56பேருமென  96 இலங்கையரைக் கைதுசெய்யவென சர்வதேச பொலிஸாரினூடாக (இன்டர்போல்) அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதி முதல் இன்றுவரை கைது செய்யப்பட்ட 100பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும். இதேவேளை நோர்வேயில் உள்ள புலிகள் இயக்கத்தின் தற்போதைய சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவன் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்து வருவதாகவும். நிதி திரட்டல் திரட்டப்படும் நிதியின் மூலம் புலிகள் இயக்கத்தினர் மறைந்திருப்பதற்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன என்றும். இவ் நடவடிக்கையின் பின்னால் நெடியவனே உள்ளார் என்றும். கடந்த சில தினங்களுக்கு சுட்டுக்கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூவரும் நெடியவனின் ஆலோசனைக்கமையவே செயற்பட்டு வந்துள்ளனர் என்றும். தாக்குதல் ஒன்றின் மூலம், இலங்கையில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என வெளி உலகுக்கு காட்டுவதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுள்ளனர் என்றும் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதே நேரம் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தலைவராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மீது சர்வதேச பொலிஸாரான இன்டர்போலினால் விடுக்கப்பட்டிருந்த அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும். 2009ஆம் ஆண்டின் பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதாலேயே கே.பி மீதான அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியர்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இளம் வயது தமிழர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ள ஆலோசனை.-

sri armyஇலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு படையில் நிலவுகின்ற வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக, வடமாகாணத்திலுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை சேர்த்துக்கொள்வது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும். இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவில் பாரிய வெற்றிடம் நிலவுவதாகவும், அந்த வெற்றிடம் பெரும்பாலும் வடக்கினை சார்ந்திருப்பதினாலுமே வடமாகாண தமிழ் இளைஞர், யுவதிகளை படையில் சேர்ப்பதற்கு ஆலோசித்து வருவதாகவும். இதேவேளை, சிவில் பாதுகாப்பு படையில் வடமாகாண இளைஞர்களை சேருமாறு விண்ணப்பங்கள் விநியோகித்து வருவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும், தமது பரிசீலனைகள் நிறைவடைந்ததும் உத்தியோகபூர்வமாகவே விண்ணப்பங்கள் கோரப்படுமெனவும் படைத்தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கை ராணுவத்தினரின் குடும்பப்படங்கள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை

imagesCAHNL3TZஇலங்கைப் போரின் போது பொதுமக்களைக் கொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் பலரின் புகைப்படங்கள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய விவரங்களை பிரித்தானிய தமிழ் ஒன்றியம் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த அமைப்பு வெளியிட்ட விவரங்களில் இலங்கை ராணுவத்தினர் பலரது புகைப்படங்கள் மட்டுமல்லாமல், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவரங்களில் காணப்படுவோர் உண்மையில் இந்தக் குற்றங்களை இழைத்தார்களா? என்பது குறித்த ஆதாரம் ஏதும் இருக்கிறதா? என்று கேட்டதற்கு பதிலளித்த இந்த அமைப்பைச் சேர்ந்த ஆழியன் , இது குறித்த ஆதாரங்களை தாங்கள் ஐநா போன்ற அமைப்புகளுக்குத் தரவிருப்பதாக கூறினார்.

ஆனால் போரில் ஈடுபடாத ராணுவத்தினரின் குடும்பத்தினர் குறித்த தரவுகளை பிரசுரித்தது குறித்து கேட்டதற்கு பதிலளித்த ஆழியன், ராணுவத்தினர் போர்முனைக்கு அனுப்பப்படும்போது, அரசு, அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து கௌரவித்து அனுப்பியது என்ற பின்னணியில் இந்தப் படையினர் போர்முனையில் என்ன குற்றங்களை இழைத்தார்கள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்றே கூறமுடியும், எனவே அந்தப் படங்களைப் பிரசுரித்த்தில் தவறில்லை என்றார். அது போல, அவர்களது அந்தரங்க உரிமைகளும் இதனால் மீறப்பட்டதாகக் கூறுவது தவறு, ஏனென்றால் சிங்கள படையினர் வன்னியில் போர் நடந்த போது இழைத்த மனித உரிமை மீறல்களை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர் என்றார் அவர்.

நிபுணர் குழுவிடம் இராணுவத்தினர் சாட்சி? இலங்கை இராணுவம் மறுப்பு

imagesCA0Q2ETUஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில், இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் குறிப்பிட்டதன் பிரகாரம், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முன்னிலையில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலரும் சாட்சியமளிக்கவுள்ளதாக நம்பகரமான இராஜதந்திர வட்டார செய்தி தெரிவிக்கிறது. புலிகளுக்கெதிரான யுத்தம் இடம்பெற்ற காலத்தில், படைகளில் மிக உயர்ந்த தரத்தில் பணியாற்றிய அதிகாரிகள் சிலரே இவ்வாறு சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் முடிவுற்ற காலத்தில் அரசு தலைமையுடன் ஏற்பட்ட கசப்புணர்வுகளை அடுத்து இந்த அதிகாரிகள், நாட்டைவிட்டு வெளியேறி, பிறநாடுகளில் நிரந்தரமாக வாழ்ந்துவருகின்றனர். அவர்களில் குறைந்தது மூன்று அதிகாரிகளின் சாட்சியங்களை மேற்கு நாடுகள் சில ஏற்கனவே பதிந்து வைத்திருக்கின்றன என்றும், மேற்கு நாடுகளின் தொழில்நுட்ப சான்றுகள், புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்களுடன் அந்த சாட்சியங்கள் சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் முன்னால் வலுவான ஆதாரங்களாக முன்வைக்கப்படும் என்றும் அந்த இராஜதந்திரமட்ட செய்தி மேலும் தெரிவிக்கிறது. சாட்சியமளிக்கத் தயாராக இருப்பவர்களுள் ஒருவர் இராணுவத்தின் மிக உயர்ந்த தர நிலையில் பதவி வகித்த, பௌத்தத்தைச் சாராத பிற மதம் ஒன்றைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது. அத்தோடு, சில சாட்சிகளை ஏற்கெனவே பதிவுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக எவரேனும் செயற்பட்டால், அதற்கெதிராக எங்கும் தான் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நிபுணர் குழுவிடம் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சாட்சியமளிக்கவுள்ளமையை முற்றாக மறுக்கின்றார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய. இலங்கைக்கும் அதன் பாதுகாப்பு படைகளுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்த சர்வதேசம் முயற்சித்து வருகிறது. இதுவொன்றும் புதுவிடயமல்ல. இல்லாத ஒரு விடயத்திற்கு எவர் வந்து சாட்சி சொன்னால்தான் என்ன? முதலில், நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. இந்நிலையில், அந்த நிபுணர் குழுவிற்கு சாட்சி என்பது வேடிக்கையாகவிருக்கிறது. பொய்யான சாட்சிகளை எவர் வேண்டுமானாலும் உருவாக்கலாம். நடைபெறாத ஒரு செயலுக்காக பொய் சாட்சியங்களை உருவாக்க சர்வதேசம் முயற்சிக்கிறது. இதற்கு உண்மையான படையினர் எவரும் பலியாகமாட்டார்கள் என்று பிரிகேடியர் ருவான் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலையில் பொதுமக்களின் பாவனையில் உள்ள காணி அரபடையால் சுவீகரிப்பு

trincomaleeதிருகோணமலை மாவட்டம் சீனன்குடாவை அண்மித்த வெள்ளைமணல் கடலோர பகுதியில் பொதுமக்கள் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி விமானப்படையினரால் திடீரென கையகப்படுத்தப்படுவதாக உள்ளுர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மபுள்பீச் தொடக்கம் கருமலையூற்று வரையிலான நிலப்பகுதியை விமானப்படை சுவீகரிப்பதற்கான எல்லைகள் அடையாளமிடப்பட்டு, முட்கம்பி வேலிகளும் போடப்பட்டு, இந்த நிலம் விமானப்படைக்குரியது என்கிற அறிவிப்பு பலகைகளும் அந்த பகுதியில் நடப்பட்டுள்ளன. இந்த காணிகள் எல்லாம் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளாக இருந்தாலும் அந்த காணிப்பிரதேசம் உள்ளுர் மக்களால் கால்நடை வளர்ப்பு , கருங்கல் உடைப்பு மற்றும் பயிர்ச்செய்கை என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. விமானப்படையின் இந்தக் காணி சுவீகரிப்பு காரணமாக அந்த பகுதி மக்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் இழக்கப்படுவதோடு அவர்களின் அன்றாட செயல்பாடுகளுக்கான சுதந்திரமும் இழக்கப்படுவதாக வடக்கு- கிழக்கு சிங்கள அமைப்பு குற்றம் சாட்டுகின்றது. வடக்கு- கிழக்கு சிங்கள அமைப்பானது யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் இராணுவத்திற்கு ஆதரவாகவும் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட கடும் போக்குடைய சிங்கள அமைப்பாக பார்க்கப்படுகிறது. விமானப்படையினரால் குறித்த காணி சுவீகரிக்கப்படுவது தொட்பாக கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளரான அனுர பண்டார, 3500 தொடக்கம் 4000 ஆயிரம் ஏக்கர் வரையிலான காணி விமானப் படையினரால் அடையாளமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த பகுதியில் தற்போது விமானப்படைக்கு குழாய் நீர் விநியோக வேலைகளும் இடம் பெற்று வருவதால் நிரந்தர முகாமொன்று அமையலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார். வெள்ளைமணல் பகுதியை பொறுத்தவரை அநேகமாக முஸ்லிம்களே வாழந்து வரும் கிராமம் என்று கூறிய அனுர பண்டார, இந்த காணி சுவீகரிப்பு விடயத்தில் அவர்கள் பயம் காரணமாக வாய் திறக்க முடியாதவர்களாக காணப்படுவதாக கூறினார். போருக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படையினரின் தேவைகளுக்கு காணி தேவைப்படுமானால், அதுகுறித்து மாகாண முதலமைச்சரின் ஆலோசனை பெறப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தன்னிடம் தெரிவித்துள்ளதாக ஏற்கனவே மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் ஆலோசனை பெறப்பட்டதா?

குருநகரைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (22) மரணம் யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.-

rev1_CI

bishop-pro-02 jaffna1 ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி படிப்பதற்காகச் ஜெரோமி சென்ற போது யாழ். ஆயர் இல்லத்தில் இருக்கும் குருமார்களில் இருவர் தங்களைக் காதலிக்குமாறு ஜெரோமியிடம் வற்புறுத்தியுள்ளனர். அத்துடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்தும், மிக நெருக்கமான முறையில் தம்முடன் இருக்குமாறும் தொந்தரவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த யுவதி அவரது பெற்றோர்களிடம் இவ்விடயம் தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார். இந்த விடயத்தினை பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  இந்நிலையில் குறித்த யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) புங்கன்குளம் சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்வில்லை. மறுநாள் திங்கட்கிழமை (14) மகளை காணவில்லையென யாழ். பொலிஸ் நிலையத்தில் ஜெரோமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், ஜெரோமி சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்குப் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்டார். ஜெரோமியின் மரணத்திற்கு காரணமாக இருந்த இரு குருமார்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்திருந்த போதும், இரு தினங்களாகியும்,இரு குருமார்களுக்கும் எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான நிலைமையில், ஜெரோமியின் மரணத்திற்கு நீதி வேண்டியும் குறித்த இரு குருமார்களை கைது செய்யுமாறு கோரியும் யுவதியின் உறவினர்கள் இன்று (16.04.14) யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதே நேரம் இனம் தெரியோதாரால் யுவதி சடலமாக எடுக்கப்பட்ட கிணற்றின் மேற்பரப்புகள் உடைக்கப்பட்டுள்ளன. இக் கிணற்றில் சில மாதங்களுக்கு முன்பும் ஒரு பெண்ணின் சடலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ராஜீவ் காந்தி, இலங்கைத் தமிழ் மக்களுக்காக இரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? – சோனியா

sonia_CIஇலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர். காங்கிரசை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர் ராஜிவ் இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்’ என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என அரசியல் கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. என தேர்தல் பிரசாரத்துக்காக கன்னியாகுமரி பிரதேசத்தில் பேசியுள்ள சோனியா காந்தி மேலும் பேசுகையில் இங்கு வாழும் தமிழர்களுக்கு வீதிகள், பள்ளிக்கூடங்கள், மறுவாழ்வு மையம் அமைத்து கொடுத்துள்ளோம். அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரசை குறை கூற வேண்டாம். இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.  மீனவர்கள் படும் துன்பம் எனக்கு தெரியும். எனது அரசு மீனவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பு மீனவர்களை சந்தித்து பேச்சு நடத்த காங்கிரஸ்தான் முழு ஏற்பாடு செய்தது. அ.தி.மு.க,. அரசு காலதாமதம் செய்தது என்பதை பகிரங்கமாக சொல்லி கொள்கிறேன்’;. காங்கிரஸ் கட்சி குறித்து யாரும் பொய் பிரசாரம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து உதவி செய்யும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை இறுதி யுத்தத்தில் இந்தியப் படை பங்கேற்றது.- 

imagesCAUOS3UPஇந்திய நாடாளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் அனுமதி கோராமல், 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது இந்திய படையினர் பங்கேற்றதாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று சட்டத்தரணியான டெல்லியைச் சேர்ந்த ராம்சங்கர் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய படையினரை 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற  யுத்தத்தில் ஈடுபடுத்தியதாகவும். இலங்கையில் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்தத்தை சீக்கியர் ஒருவர் வழி நடத்தியதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை நேரடியாக கண்ட சாட்சிகளும், ஆதாரங்களும் தம்மிடம் இருப்பதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இந்திய இராணுவம், வான்படை மற்றும் கடற்படை ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவில் யுத்தம் பிரகடனம் செய்யப்படாத நிலையில், இந்திய அரசியல் அமைப்பின் படி, இந்திய படையினரை இவங்கையில் ஈடுபடுத்தியமை சட்ட விரோதமானது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான தீர்ப்பாயம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு இந்திய உயர்நீதிமன்றத்தில் நாளை வியாழக்கிழமை  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

தென்கொரிய பயணிகள் கப்பல் கடலில் மூழ்கின்றது.

_cEejphfkg476 பயணிகளில் 325 பேர் உயர்தர பாடசாலையின் மாணவர்கள் என்றும் 32 பணியாளர்களுடன் பயணித்த தென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று பயணிகளுடன் தென்கொரிய கடலில் நேற்று புதன்கிழமை மூழ்கிகொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கப்பலில் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் 18 ஹெலிகொப்டர்களும் 34 படகுகளும் 180 பணியாட்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்ற செய்திகளின்படி 100பேரைக் காணவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கப்பலில் 900பயணிகளையும் 130 கார்களையும் ஏற்றிச் செல்லமுடியம்.

இலங்கை ஹட்டன் பகுதியில் விபத்து

bus_accident_005ஹட்டன்- டிக்கோயா பிரதான வீதியில் செவ்வாய்கிழமை(15) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில்  26பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்களில் 23 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மூவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும். இவ்விபத்தானது, ஹோல்டனிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்வண்டியும், ஹட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியும் வனராஜா பகுதியில் நேருக்கு நேர் மோதியதிலேயே இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு நாட்களில் நெடுஞ்சாலைகளில் ரூ.133 இலட்சம் இலாபம் .-

untitled2014, ஏப்ரல் 13, 14 ஆம் திகதி இந்த இரண்டு நாட்களிலும் தென் அதிவேக நெடுஞ்சாலையில் 42 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளன. இதன் மூலமாக 90 இலட்சம் ரூபாவும், கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த  22 ஆயிரம் வாகனங்கள் ஊடாக 43 இலட்சம் ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது. கொழும்பு-கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில்; ஆகிய இரண்டு தினங்களில் மட்டும் 133 இலட்சம் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

நிஷா பிஸ்வால்-சொல்ஹெய்ம் சந்திப்பு

nisha_erik_001தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கைப்பற்றி முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹொயிமுடன் பேசியுள்ளார். மோதல் நடந்த காலத்தில் ஷொல்ஹொயிம் சமாதான தூதுவாகவும் மத்தியஸ்தராகவும் செயற்பட்டவர். அவர் தற்போது இலங்கை விடயங்களை ஆவலுடன் கவனித்து வருகின்றார். உதவி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் பிஸ்வால் முதல் தடவையாக பெப்ரவரியில் இலங்கைக்கு வந்தார். இந்த சந்திப்பின் பின்னர் பிஸ்வால் தனது டுவிட்டர் செய்தியில் இலங்கைப்பற்றி பேசத் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைந்ததாக கூறினார். இலங்கையில் ஜனநாயகத்தையும் சகல இனங்களின் உரிமைகளையும் ஆதரிக்கும் முக்கிய பாத்திரத்தை அமெரிக்கக வகிப்பதாக செல்வொயிட் பில்வாவுடனான சந்திப்பின் பின்னர் கூறியுள்ளார். இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை செயற்படுத்தல் தொடர்பில் அமெரிக்காவின் முனைப்பை தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்றது

ஆளில்லா நீமூழ்கி மூலம் தேடுதல்

A153காணாமல் போன மலேசியன் விமானத்தை கண்டறியும் முகமாக தானாகவே இயங்கக் கூடிய ரோபோ நீர்மூழ்கி முலம் இந்து சமுத்திரத்தில் முதலாவது சுழியோடும் நடவடிக்கை இடம் பெற்றள்ளது, சிறிய நீர்மூழ்கியால் விமானம் குறித்த எந்த விதமான தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகபட்சம் செல்லக் கூடிய ஆழத்துக்கு செல்வதற்கு முன்னதாக, கடலின் அடித்தளம் குறித்து பல மணிநேரம் தகவல்களை சேகரிக்கக் கூடியதாக இருந்தது. அதன் பின்னர் அது நீரின் மேற்பரப்புக்கு வந்தது. நிறுத்தப்பட்ட இந்த நடவடிக்கை ஒரு பின்னடைவு அல்ல என்றும்.. ஆஸ்திரேலியாவுக்கு மேற்கே கடந்த வாரம் கண்டறியப்பட்ட சமிக்ஞைகள் அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டி பதிவு கருவியில் இருந்துதான் வந்தனவா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. இருப்பினும் அந்த சிறிய நீர்மூழ்கி மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் அமெரிக்க கடற்படையினர் கூறியுள்ளனர்.

புலிகளுடன் தொடர்புடைவர்கள் என அண்மையில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் விடுதலை

kopi and towவவுனியா நெடுங்கேணியில் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கோபியின் தாயார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும். மற்றும் கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவருடனும் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த 18 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.  கொழும்பு தெஹிவளையில் வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றியவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் அதில் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் புலிகளை மீண்டும் இலங்கையில் உயிர்ப்பிக்க வெளிநாட்டு புலித்தலைவர்களின் ஆதரவு, ஆலொசனையின் பெயரில் செயற்பட்டவர்கள் எனக் கூறி அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டுதாக அறிவிக்கப்படும் இவர்கள் முன்நாள் புலி உறுப்பினர்கள் என்றும். இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பயிற்சி பெற்று கிளிநொச்சி கொக்காவில் முகாமில் தொழில் புரிந்து வந்தவர்கள் என்றும். இவர்கள் எப்படி இப்படியானார்கள், கொல்லப்பட்ட இடத்திற்கு எப்படி மூவரும் சென்றார்கள் என்ற பல சந்தேகத்திற்கிடமான கேள்விகளுடன் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் ஊடகவியலாளர் இனந்தெரியாதோரால் தாக்குதல்-

jaffnaயாழிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு செய்தியாளராகக் கடமையாற்றும் சிவஞானம் செல்வதீபன் திங்கட்கிழமை (14) இரவு 9 மணியளவில் கடமை முடிந்து தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த வேளை இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தவர்கள் இருவர் புறாப்பொறுக்கிச் சந்தியில் வைத்து இரும்புக் கம்பிகளினால் தாக்கியுள்ளாhகள். தாக்குதலுக்கு உள்ளானவர் அபயக்குரல் எழுப்பியவண்ணம் தப்பிக்க ஓடியபோதும் துரத்தி துரத்தி தாக்கப்பட்டதாகவும். சத்தம் கேட்டு ஊர்மக்கள் விரைந்ததும்   தாக்குதல் மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் உடகவியலாளர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்குள்ளனர்.

352 விபத்துக்கள்: 30 பேர் பலி 780 பேர்வரை கைது-

karadiyanaru accidentகடந்த 10 ஆம் திகதி முதல் தமிழ், சிங்கள புத்தாண்டு பிறக்கும் வரையில் நான்கு நாட்களில் 352 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் 30 பேர் பலியாகியுள்ளதாகவும்.  ஜய வருட பிறப்பிற்கு முதல் நாளான ஏப்ரல் 13 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 63 விபத்துகளில் ஏழுபேர் பலியாகியுள்ளனர் எனவும். இதே நேரம் புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட செயற்றிட்டம் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 14 ஆம் திகதி 780 சாரதிகளை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது

பொதுநலவாயத்திற்கான நிதியை இடைநிறுத்தியது கனடா-

canadaஇலங்கையின் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாகவே பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதியில் பொதுநலவாய அமைப்புக்கு கனடா வழங்க திட்டமிட்டிருந்தது 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை தாம் இடைநிறுத்துவதாகவும். ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இபயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்து கனடா பிரதமர் இதில் கலந்து கொள்ளாமல் மனித உரிமை மீறல் தொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்ததும். அண்மைய ஜ.நா அமர்வுகளில் இலங்கைக்கு சார்பில்லாமல் கனடா நடந்து கொண்டதும் யாவரும் அறிந்ததே.

images


தென் ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸின் குழுவினர்  இலங்கை வரவுள்ளனர்

untitledஇலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தென் ஆப்ரிக்க அரசு மற்றும் ஆளும் ஆப்ரிக்கத் தேசியக் காங்கிரஸின் தலைவர்களுடன் அந்நாட்டின் அழைப்பின் பேரிலேயே ஆலோசனை நடாத்த சென்ற கூட்டமைப்பினர் நேற்று நாடு திரும்பினர். இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாதத் தடைபட்டுள்ள நிலையில், அதை ஆரம்பிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தென் ஆப்ரிக்கா முன்வந்துள்ளது என்றும். ஆப்ரிக்கத் தேசியக் காங்கிரஸின் துணைத் தலைவர் சிரில் ராமஃபோசா தலைமையிலான குழுவினர் இலங்கை வந்து பல்தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர் என்றும். ஒரு மத்தியஸ்தர் என்கிற வகையில் இல்லாவிட்டாலும், அனுசரணையாளர் என்கிற வகையில் அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையே அவர்கள் செயற்படுவார்கள் எனவும். இலங்கை அரசின் வேண்டுகோளின்படியே அனுசரணையாளர் எனும் பொறுப்பை தென் ஆப்ரிக்கா ஏற்றுள்ளது என்றும், அதை தாங்களும் வரவேற்பதாகவும்;. பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு முன்னர் வடக்கு கிழக்குப் பகுதியில் மக்களிடையே அச்ச உணர்வற்ற இயல்பான நிலை திரும்ப வேண்டும் என்பதை தமது தரப்பு தென் ஆப்ரிக்கத் தரப்பிடம் வலியுறுத்தியுள்ளதாகவும். சிரில் ராமஃபோசா தலைமையிலான குழுவினர் இலங்கை வந்து சென்ற பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த விஷயங்கள் தெளிவாகும் எனவும், அரசியல் தீர்வுத் திட்டத்தின் அவசியம் குறித்து அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது எனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் கூறினார்.

இலங்கைக்கு எதிராக ஜூனில் சர்வதேச விசாரணை ஐநா அறிவிப்பு

un manitha urimai peravaiஇலங்கையில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா வில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச விசாரணைகள் வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க உள்ளதாகவும். இந்த விசாரணையை மேற்கொள்வதற்குத் தேவையான நெறிமுறை பற்றிய தெளிவற்ற நிலை காணப்படுகிறது என்றும், இந்த நிலை மே மாத இறுதியிலேயே முடிவுக்கு வரும் என்றும், அதன்பின்னரே முழு அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும்  ஐ.நா உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நாவின் இந்த விசாரணை முயற்சிகளை இலங்கை அரசு நிராகரித்திருப்பதுடன், அதற்கு அயல்நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும், இலங்கைக்கு பலத்த ஆதரவை வழங்கி வருகின்றன. அதேவேளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கு இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5 வருடங்களில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 4145 இலங்கையர்கள் கைது –

meenpidi2009 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல கடல் வழியை பயன்படுத்திய 4145 இலங்கையர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லப் பயன்படுத்திய 88 டிரேலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற் படைப்பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவில் இருந்தும் இந்தோனேசியாவில் இருந்தும் சென்ற இலங்கையர்களின் புள்ளி விபரம் இன்னும் கணக்கிடப்படவில்லை.

அத்துமீறிய குடியேற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினரின் கப்பல்களுக்கு மேலதிகமாக அவுஸ்திரேலியா வழங்கும் இரு கப்பல்கள் இன்னும் 2 மாதங்களில் இலங்கை வந்து சேரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை கடல் பரப்பை கண்காணிக்கும் விசேட கடற் படைப் பிரிவின் அதிகாரிகள், சிப்பாய்கள், மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடனேயே இந்த சர்வதேச ஆட்கடத்தல் தொடர்வதாக பலரும் பலமுறை ஆதாரங்களுடன் நிரூபித்தும் அரசாங்கம் அடிநிலையில் உள்ள அப்பாவிகளையே கைதுசெய்வதாகவும், தண்டிப்பதாகவும் ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ploteparasothy -

பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமை யாக்கப்படும் –  கோத்தபாய

imagesCAXCKG34பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாகவும். தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணினால் சட்டத்தை உச்ச அளவில் அமுல்படுத்த நேரிடும் எனவும், தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும்  இலங்கையின் பாதுகாப்புச் செயலாளலளர் கோத்தபாய ராஜபக்ச கடுமையான தொனியில் அறிவிப்பை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பை அடத்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக, பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணி வரும் நபர்களின் தராதரத்தைப் பாராது சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

மீண்டும் பபயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவுவோரை கைதுசெய்ய நடவடிக்கை

kopi and towஅண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கும், மீண்டும் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க உதவிகளை வழங்கியது தொடர்பாகவும். சர்வதேச அளவில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிலர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும். இதேவேளை விநாயகம் மற்றும் நெடியவன் போன்றோறைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும்
புலிகளுக்கு உயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை விரிவுபடுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.