Header image alt text

வவுனியாவில் நடைபெற்ற 25வது வீரமக்கள் தின நான்காம் நாள் நினைவுகள் –

வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25ஆவது வீரமக்கள் தினம் கழகத்தின் தோழர்களால் கோவில்குளத்தில் உமாமகேசுவரன் வீதியில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேசுவரன் அவர்களின் இல்லத்தில் சுடரேற்றி, மலரஞ்சலிகளுடன் இன்றுமாலை (16.07.2014) நடைபெற்றது. இவ் நிகழ்வில் கழகத்தின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு இலங்கையில் தமிழர் உரிமைப் போராட்டத்தில் மறைந்த கழகத் தோழர்கள், மாற்று அமைப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து மலரஞ்சலி செலுத்தினர்.

(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

IMG_0872IMG_0881IMG_0882IMG_0880IMG_0879IMG_0878 (1)IMG_0874IMG_0875IMG_0884IMG_0887IMG_0888IMG_0891IMG_0899IMG_0900IMG_0901

IMG_0903IMG_0904IMG_0905IMG_0908IMG_0909IMG_0910IMG_0913IMG_0915IMG_0917IMG_0918IMG_0919IMG_0923IMG_0925IMG_0746IMG_0745IMG_0931IMG_0934IMG_0936IMG_0938IMG_0940IMG_0941IMG_0945IMG_0949IMG_0952IMG_0867IMG_0865IMG_0864IMG_0863IMG_0861IMG_0856IMG_0855IMG_0853IMG_0851IMG_0849IMG_0848IMG_0846IMG_0845IMG_0837IMG_0829IMG_0824IMG_0816IMG_0813IMG_0812IMG_0805IMG_0744171856431112131415192224262728

புளொட்டின் கொழும்பு தலைமையகத்திலும் 25வது வீரமக்கள்தின நிகழ்வுகள்

இன்றுகாலை 9.30மணியளவில் புளொட்டின் கொழும்பு தலைமையகத்திலும் 25வது வீரமக்கள்தின நிகழ்வுகள் கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. ,தன்போது கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் திருவுருவபடத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் இடம்பெற்றது. கொழும்பில் நடைபெற்ற வீரமக்கள் தின நிகழ்வில் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய ஜி.ரி.லிங்கநாதன், புளொட்டின் மத்தியகுழு உறுப்பினர் எம்.பத்மநாதன், கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

20140716_093420 20140716_093452 20140716_093506 20140716_093526 20140716_093539 20140716_093657 20140716_093729 20140716_093818 20140716_093843 20140716_094016 20140716_094037 20140716_094057 20140716_094109 20140716_094127 20140716_094140 20140716_094315

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற ‘புளொட்’டின் வீரமக்கள் தினம்..!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் அமெரிக்க கிளையினால், 25ஆவது வீரமக்கள் தினம் 15.07.2014 அன்றுமாலை 06.00 மணியளவில்  அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் உள்ள 976 அல்கமிநோரியல், சந்நிவில் மண்டபத்தில்  சுடரேற்றி, மலரஞ்சலிகளுடன் நினைவு கூறப்படது.

இவ் நிகழ்வில் கழகத்தின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கழகத்தின் மறைந்த தோழர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

DSC_0024 DSC_0027 DSC_0031 DSC_0035 DSC_0038 DSC_0044 DSC_0045 DSC_0046 DSC_0047 DSC_0050 DSC_0051 DSC_0052 DSC_0053 DSC_0055 DSC_0056 DSC_0059 DSC_0061 DSC_0063 DSC_0074 DSC_0092

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ‘புளொட்’டின் 25ஆவது வீரமக்கள் தினம்..!!

plote.uma-v.m.tதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சர்வதேச ஒன்றியங்களின் சார்பில் கழகத்தின் அமெரிக்க கிளையினால் 25ஆவது வீரமக்கள் தினம் 15.07.2014 இன்றுமாலை 06.00 மணியளவில்  அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் உள்ள 976 அல்கமிநோரியல்இ சந்நிவில் மண்டபத்தில் நினைவு கூறப்பட உள்ளது.

தொடர்புக்கு.. தோழர் ராஜு -001.4158320641

புளொட் தலைவர் புளொட் நோர்வே அமைப்பாளர் – நோர்வே அதிகாரிகளுடன் சந்திப்பு-

norway meet 11.07 (1) norway meet 11.07 (2)புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் நோர்வே நாட்டு அமைப்பாளர் ராஜன் ஆகியோர் கடந்த 11.07.2014 வெள்ளிக்கிழமை அன்று நோர்வே நாட்டின் பிராந்திய அலுவல்கள் மற்றும் அபிவிருத்திக்கான மூத்த ஆலோசகர் ரூடில் லங்க லெட்டா மற்றும் நோர்வே வெளிவிவகார அமைச்சின் உதவி இயக்குநர் நாயகம் தூண அலோஸ் ஆகியோருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

ஓஸ்லோவில் அமைந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின்போது வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. Read more

புளொட்டின் 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்-

IMG_0645plote.uma-v.m.t

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் நேற்று 13ம்திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் நாளை மறுதினம் 16ம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது. வீரமக்கள் தினத்தின் 02ம் நாளான இன்றும் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் மௌன அஞ்சலியும், மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். வீரமக்கள் தினத்தின் இறுதிநாளான 16ம்திகதி புதன்கிழமை அன்று செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் மலராஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்படுவதுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு ஆலய கட்டிட நிர்மாணத்திற்கு நிதியுதவி-

thetkiluppaikulam (7)thetkiluppaikulam (3)புளொட்டின் 25 ஆவது வீரமக்கள் தினத்தையொட்டி தொடர்ந்து பல்வேறு சமூகப் பணிகள் கழகத் தோழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இச் சமூகப் பணிகள் கல்வி, விளையாட்டு, ஆலய அபிவிருத்திகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புளொட்டின் குடியேற்ற கிராமங்களில் ஒன்றான வவுனியா திருநாவற்குளத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலய கட்டிட வேலைகளுக்கென, 25 ஆவது வீரமக்கள் தினத்தையொட்டி புளொட்டின் லண்டன் கிளையைச் சேர்ந்த தோழர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் வழங்கப்பட்ட ஒருதொகைப் பணம் வவுனியாவின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களால் ஆலய நிர்வாகத்தினரிடம் நேற்று கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையின் உபதலைவர் திரு சி.கணேசமூர்த்தி, செயலாளர் செல்வி கே.பகவதி, பொருளாளர் திரு த.இலங்கைரத்னம், உப செயலாளர்  சி.குகதாசன் மற்றும் புளொட் அமைப்பைச் சேர்ந்த ராஜா, சுரேஷ்குமார், காண்டி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

25ஆவது வீரமக்கள் தினம் – தெற்கிலுப்பைக்குளம் ஆலய கட்டிட வேலைகளுக்கு நிதியுதவி-

thetkiluppaikulam (8)veeramakkathi thinaththai munnittu (1)veeramakkathi thinaththai munnittu (3)veeramakkathi thinaththai munnittu (2)வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தில் அமையப்பெற்றுள்ள சிறீ முத்துமாரியம்மன் ஆலய கட்டிட வேலைகளுக்கென, புளொட்டின் 25ஆவது வீரமக்கள் தினத்தையொட்டி புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான தோழர் சங்கர் ஐயா அவர்களினால் வழங்கப்பட்ட ஒருதொகைப் பணம் ஆலய  நிர்வாகத்தினரிடம் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் வைத்து, வவுனியாவின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் நேற்று வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு கே.பாலகிருஷ்னன், செயலாளர் திரு பி.சதீஸ்குமார், பொருளாளர் திரு வி.அருட்செல்வன், நிர்வாக சபை உறுப்பினர்களான திரு. திருச்செல்வம் திரு. கோகிலகுமார், திரு. சிறிகாந்தன், திரு. வசந்த   மற்றும் புளொட் அமைப்பைச் சேர்ந்த யோகராஜன், வின்சன் கெனடி, சிறி, சுரேஷ்குமார், காண்டி, சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது,

வவுனியாவில் நடைபெற்ற  25 ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகள்.!!
(படங்கள் இணைப்பு)

IMG_0645தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25 ஆவது வீர மக்கள் தினத்தின் ஆரம்ப அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் கழகத்தின் தோழர்களால் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர்  தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில்  முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) கொடியினை கழகத்தின் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

 

அதனைத்தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அமரர் அ.அமிர்தலிங்கத்தின் திருவுருவப்படத்துக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களினதும் திருவுருவபடத்துக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வன்னி பிராந்திய அமைப்பாளர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களினால் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டுஇதொடர்ந்து கழகத்தின் தோழர்களால் மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டது.

இவ் ஆரம்ப நிகழ்வுகளில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர்களான  யோகராஜன்இ குகன்இ ராஜாஇ மாலாஇ  மத்திய குழு உறுப்பினரும்இ வெங்கல செட்டிக்குள பிரதேச சபை உறுப்பினருமான ஜெகதீஸ்வரன்(சிவம்)இ வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் இராஜசேகரம்(சேகர்)இ பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் நகர பிதா வின்சன் கெனடிஇ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கியஸ்தர்களான சூரிஇ சிவாஇ சங்கர்இ தவம்இ குருஇ  நெப்போலியன்இ சுரேஷ்இ மயூரன்இ அனுஇ  சிறிஇ காண்டிஇசுகந்தன் ஆகியோருடன் கனடா வாழ் ஆதரவாளர் சத்தியசீலன்இ மற்றும் தேவா ஆகியோருடன் பொது மக்களும் நிகழ்வில்  கலந்து அஞ்சலி செலுத்தினர்.

IMG_0590 IMG_0591 IMG_0594 IMG_0598 IMG_0601 IMG_0605 IMG_0606 IMG_0607 IMG_0608 IMG_0609 IMG_0610 IMG_0611 IMG_0612 IMG_0613 IMG_0614 IMG_0616 IMG_0617 IMG_0618 IMG_0619 IMG_0620 IMG_0621 IMG_0622 IMG_0623 IMG_0624 IMG_0625 IMG_0626 IMG_0627 IMG_0628 IMG_0629 IMG_0632 IMG_0633 IMG_0634 IMG_0635 IMG_0645

 

போராட்டத்தில் மறைந்தவர்களை நினைவு கூர்வது மனச்சாட்சியும், தார்மீக உணர்வுமுள்ள ஒவ்வொரு மனிதனதும் கடமையாகும். – ஈ.பி.ஆர்.எல்.எப „பத்மநாபாஅணி” தலைவர் தோழர் சுகு

untitledதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சர்வதேச ஒன்றியங்களின் சார்பில் கழகத்தின் சுவிஸ் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 25 ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.07) மாலை சுவிற்சர்லாந்தின்  சூரிச் மாநகரில் நடைபெற்றன. இந்த நிகழ்வை முன்னிட்டு பத்மநாபா ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சிறீதரன் (சுகுத் தோழர்) அனுப்பி வைத்த அறிக்கை வருமாறு… போராட்டத்தில் மறைந்தவர்களை நினைவு கூர்வது மனச்சாட்சியும் இதார்மீக உணர்வுமுள்ள ஒவ்வொரு மனிதனதும் கடமையாகும். இன்று போராளிகள் என்ற சொல் எமது சமுதாயத்தில் முகமிழந்து நிற்கிறது. இறந்தவர்கள் போக எஞ்சியவர்கள் அனைத்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும நடைப்பிணங்களாக முகவரியற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் போராடிய பெண்களும் ஆண்களும் சமூக நிலையில் அவலமானதும் பாதுகாப்பற்றதும் இடர்பாடு மிக்கதுமான வாழ்க்கையையே வாழ்கிறார்கள். பொதுவாக போராடப் புறப்பட்டவர்கள் எமது சமுதாயத்தில் வறுமைப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளே. எமது போராட்டகாரர்கள் கௌரவப்படுத்தப்படா விட்டாலும் பரவாயில்லை. கண்ணியமாக வாழமுடியவல்லை. இன்று இலங்கையில் மாகாண சபைமுறையொன்று உருவாகியருக்கிறதென்றால் அல்லது இலங்கையில் சமூகங்களிடையே அதிகாரப்பகிர்வு நிகழ வேண்டும் என்று உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறதென்றால் அதற்கு அனைத்து இயக்கங்கள் போராளிகளதும் பொதுமக்களதும் தியாகமே காரணம். ஆனால் 30 ஆண்டு துனபங்களின் பின்னர் தமிழ் மக்களின் தலைவர்களாக உருவாகியிருப்பவர்கள் ஏகப்பெரும்பான்மையினர் துரதிஸ்டவசமாக போராட்ட பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் அல்ல.. Read more

25வது வீரமக்கள் தினம் ஆடி13-ஆடி16 வரை

 

plote.uma-v.m.t

PhLEPQt4PlEgGzRXH_goObMKu4bEgyLLKG2Ua3rb_HYதமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்ட ஆடி 13 தொடக்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் உமாமகேசுவரன் கொலைசெய்யப்பட்ட ஆடி16 வரை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டு இலங்கையின் தமிழின விடுதலைப் போராட்டத்தில்  மரணித்த கழகக்கண்மணிகள், அனைத்தியக்கப்போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து வரும் இந்நாள் இவ்வாண்டு 25வது ஆண்டாகும். இவ்வாண்டும் வழமை போல் வவுனியா கோவில்குளம் உமாமகேசுவரன் வீதியில் அமைந்துள்ள கழகத்தின் செயலதிபர் அமரர் உமாமகேசுவரன் நினைவு இல்லத்தில் நினைவு கூரல் வைபவம் நடைபெறவுள்ளது.

புளொட் தலைவர், சுவிஸ் கிளை முக்கியஸ்தர் ஆகியோர் சுவிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்..!!

Sithar ploteபுளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் சுவிஸ் கிளை முக்கியஸ்தர்களுள் ஒருவரான சுவிஸ்ரஞ்சன் ஆகியோர்க்கும் சுவிஸ் நாட்டின் அரசியல் விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகரும், சமாதானம், மனித உரிமைகள், மனித உரிமைகளுக்கான கொள்கைகள், குடிவரவு, குடியகல்வுகளுக்கான பிரதம ஆலோசகர் மார்ட்டின் சுக்த்ஸ்சிங்கர் மற்றும் சுவிஸ் அரசின் இலங்கை விவகாரங்களுக்கான செயற்திட்ட நிபுணர் லைலா கிளெமெண்ட் ஆகியோர்க்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (08.07.2014) பேர்னில் உள்ள சுவிஸ் வெளிநாட்டமைச்சின் காரியாலயத்தில்   நடைபெற்றது.

இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்களுக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் தமிழ் மக்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருப்பது தொடர்பில் புளொட் தலைவர் விரிவாக எடுத்துக் கூறியதுடன். சுவிஸ் அரசாங்கம் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை தொடர்ந்தும் வழங்குவதோடு அந்த உதவிகளை அதிகரிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். Read more