வலி மேற்கு பிரதேச சபையின் நிகழ்வுகள்
0109.08.2014 அன்று வலி மேற்கு பிரதேசத்தில்  உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற கா.போ.த சாதாரண தர மணவர்களுக்கான கொழும்பு அருள் கல்வி வட்டத்தின் இலவச கருத்தரங்கின் போது அங்கு கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மேற்படி கருத்தரங்கை இலவசமாக நடத்தி வரும் சட்டத்தரணி வீ.தேவசேனாதிபதி அவர்கட்கு பேராசான் எனும் கௌரவத்தினை வழங்கி கௌரவித்தார். இவ் நிகழ்வில் மாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் ஏறத்தாள வலிமேற்கு பிரதேசத்தின் 1250 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். ஒவ்வொரு மணவர்களுக்கும் சராசரியாக 1500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மாணவர்களுக்கு நூல்களை வழங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்
உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற கா.போ.த சாதாரண தர மணவர்களுக்கான கொழும்பு அருள் கல்வி வட்டத்தின் இலவச கருத்தரங்கின் போது அங்கு கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மேற்படி கருத்தரங்கை இலவசமாக நடத்தி வரும் சட்டத்தரணி வீ.தேவசேனாதிபதி அவர்கட்கு பேராசான் எனும் கௌரவத்தினை வழங்கி கௌரவித்தார். இவ் நிகழ்வில் மாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் ஏறத்தாள வலிமேற்கு பிரதேசத்தின் 1250 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். ஒவ்வொரு மணவர்களுக்கும் சராசரியாக 1500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மாணவர்களுக்கு நூல்களை வழங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்
06.08.2014 அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள லங்கா சித்த ஆயுள்வேத கல்லூரி மண்டபத்தில்  புதிய மாணவர்களுக்கான அங்குரர்ப்பண கூட்டம் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட லங்கா சித்தமருத்துவ கல்லூரியின் பழைய மாணவியும் தற்போதய வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளருமாகிய திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் புதிய மாணவர்களை வரவேற்றதுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் தொடர்ந்து உரையாற்றும் போது தாங்கள் இக்கல்லூரியில் கற்ற காலம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் அக்காலத்தில் மிருந்த நெருக்கடியில் தாங்கள் கற்ற நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். மேலும் இக் கல்லூரியின் தேவைகள் தொடர்பில் உரியவர்களுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். இது மடடுமல்லாது இன்று ஆயுள் வேதத்துறையின் தேவைகள் சமூகத்திற்கு மிக முக்கியமாக உள்ள நிலையையும் எடுத்துக் கூறினார்.
புதிய மாணவர்களுக்கான அங்குரர்ப்பண கூட்டம் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட லங்கா சித்தமருத்துவ கல்லூரியின் பழைய மாணவியும் தற்போதய வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளருமாகிய திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் புதிய மாணவர்களை வரவேற்றதுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் தொடர்ந்து உரையாற்றும் போது தாங்கள் இக்கல்லூரியில் கற்ற காலம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் அக்காலத்தில் மிருந்த நெருக்கடியில் தாங்கள் கற்ற நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். மேலும் இக் கல்லூரியின் தேவைகள் தொடர்பில் உரியவர்களுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். இது மடடுமல்லாது இன்று ஆயுள் வேதத்துறையின் தேவைகள் சமூகத்திற்கு மிக முக்கியமாக உள்ள நிலையையும் எடுத்துக் கூறினார். 
10.08.2014 அன்று வலி மேற்கு பிரதேசத்தில்

 இயங்கும் பட்டப்பளை சர்வதேச முன்பள்ளியின் பரிசளிப்பு விழா பண்டத்தரிப்பு பிரான்பற்று அருள் அமுதேஸ்வரி திருமண மண்டபத்தில் இயக்குனர் திரு.டி.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பண்டத்தரிப்பு ஜசிந்தா பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரிலசர் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன சிரேஸ்ட நிதி ஆலோசகர் திரு.என்.நடராhஜா, வலம்புரி பிரதம முகாமையாளர் திரு.என்.கஜேந்திரன், கலைமாமணி திரு.கே.தெய்வேந்திரம் மற்றும் பண்த்தபரிப்பு கிராம உத்தியோகஸ்தர் கே.பி.சுஜீவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.   இவ் நிகழ்வில் கலந்து கொண்டு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில் இவ் நிகழ்வில் கலந்து கொண்டமை மட்டற்ற மகிழ்ச்சியை தருகின்றது. இப்பாடசாலை ஓர் சர்வதேச பாடசாலையாக இருந்த போதும் தமிழ் தம் பண்பாட்டில் இருந்து விலகாத வகையில் எமது கலை கலரச்சாரங்கள் பண்பாடுகள் என்பவற்றை கொண்டதாக நிகழ்வுகளை நிகழ்த்தியமை மிகச்சிறந்த அம்சமாக அமைகின்றது. எமது பண்பாட்டையும் பாரம்பரியங்களையும் பேணிய வகையில் இச் சிறார்களை கொண்டு செல்வது இன்றைய காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. இதற்கும் மேலாக மொழி அறிவு என்பது மிக முக்கியமான ஒன்றாகவே இன்று காணப்படுகின்றது. சர்வதேச மொழியாகிய ஆங்கிலம் ஒரு காலத்தில் சாதாரணமாக ஓர் வேலைக்கு தேவைப்பட்தற்கு மேலாக இன்று நாம் சமூகத்தில் வாழ்வதற்கு இன்றி அமையாத ஒன்றாக இவ் ஆங்கில மொழி மாறிவிட்டமை யாவரும் அறிந்த ஒன்றாகும் இந்த வகையில் இவ் சிறார்களின் இம் முயற்சியானது பாராட்ட கூடிய ஒன்றாகும். ஆங்கில மொழிப் புலமை உள்ளவர்களாக இச் சிறுவர்கள் எதிர்காலத்தில் உருவாகும் பொது சமூகத்தில் நன்நிலை பெறுவர். இவ் நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்கள் நிகழ்த்திய நிகழ்வு ஒவ்வொன்றும் தாய் மொழி மற்றும் ஏனைய மொழிகள் தொடர்பில் அமைந்திருந்த போதும் ஒவ்வொரு மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் நிகழ்வுகளை நிகழ்த்தியமை மாணவர்களின் மன உறுதியை மட்டும் அல்லாது ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளது விடாமுயற்சியையும் பிரதிபலிக்கும் ஒன்றாகவே கொள்ள முடியும். இதே வேளை இனிவருங்காலங்களில் தமிழர்களாகிய நாம் அறிவாயுத யுத்தத்தில் வெற்றி பெறவேண்டுமானால் தாய் மொழிப்பற்றுடன் வேற்றுமொழிபாண்டித்தியம் மிக அவசியமான ஒன்றாகவே அமைந்துள்ளமை குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். என குறிப்பிட்டதோடு இவ் நிகழ்வுகளை ஒழுங்குற அமைத்து நிகழ்திய நிர்வாகத்தினருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் திவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களது பல்வேறு சமூகம் சார்ந்த செயற்பாடுகளை பாராட்டி மேற்படி முன்பள்ளி நிர்வாகத்தினர் இவ் நிகழ்வில் விருது வழங்கி கௌரவித்தனர்.

கல்விழான் சுழிபுரம் காந்திஜி முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு விழாவும் காந்தஜி மாலை நேரக் கட்டிட திறப்பு விழாவும் 10.08.2014 அன்று மாலை 2.00 மணியளவில் தலைவர் திரு.சி. அன்னலிங்கம் தலைமையில் இடம் பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ.சரவணபவன் அவர்களும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக உரும்பிராய் கிட்ஸ் பார்க் அதிபர் திரு. அ.பஞ்சலிங்கம், ஆரம்ப பிள்ளைப்பருவ உத்தியோகஸ்தர் செல்வி.சி.ஜெயதுர்க்கா பனை தென்னை வள சமாச தலைவர் திரு.செ.கிருஸ்னராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர், இவ் நிகழ்வில் கலந்து கொண்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ.சரவணபவன் அவர்கள் உரையாற்றும் போது மேற்படி சனசமூக நிலையத்தினர் தொடர்ச்சியாக முயற்சி செய்து இந்த மாலை நேரக்கட்டிடத்தினை பூர்த்தி செய்துள்ளனர். இக் கட்டிடத்திறகான நடவடிக்கைக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பன்முகப்படுத்தப்பட்ட நிதிகிகூடாக நிதி ஒதுக்கீடு செய்து வழங்கியதற்கு மேலாக எனது தனிப்பட்ட நிதிக்கூடாகவும் இக்கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை மகிழ்வுக்குரிய பாராட்டுக்குரிய ஒன்றாகும். இக்கட்டிடம் மாணவர்களுக்கு உரிய முறையில் பயன்பட வேண்டும் அதன் ஊடாக இப் பிரதேச மாணவர்கள் நன்மை அடைய வேண்டும் என்பதே எனது நோக்காகும். இதற்கும் மேலாக நடைபெற்றுவரும்; வேலைத்திட்ங்கள் மற்றும் இவ் அவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருப்பது மிக முக்கியமான ஒர் விடயம் ஆகும். அண்மையில் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு 10 இலட்சம் ரூபா வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ் செயற்பாடானது ஒவ்வோர் பிரதேச செயலகத்திற்கும் பொறுப்பாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இவ் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் உள்ளுராட்சி அமைப்பினருக்கு உரிய முறையில் அறிவித்தல்கள் வழங்கி செயற்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள அரச சுற்று நிருபத்திற்கு மாறாக இப் பகுதியில் செயல் பாடுகள் நடைபெற்று வருவது எனக்கு பொது மக்களால் அறியத்தரப்பட்டது. உடனடியாக பிரதேச சபைத் தவிசாளரிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கேட்ட போது இவ் விடயம் தொடர்பாக அறிவித்தல்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இங்கு வழங்கப்படும் 10 இலட்சம் ரூபாயில் 65 வீதம் வாழ்வாதார உதவிக்கு என வழங்கப்படுகின்றது. இது ஓரு கட்சிக்கு வழங்கப்படும் நிதி அல்ல. ஒரு கட்சி இதனை தீர்மானிப்பது இல்லை. அரச அதிகாரிக்ள உரிய முறையில் பயனாளிகளை தெரிவு செய்ய வேண்டும் இவ்வாறு நடை பெறாத இடத்து பொது மக்கள் திரண்டு அரச அதிகாரிகளிடம் நியாயம் கேட்க வேண்டும் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள். நான் பதவிப் பொறுப்பு ஏற்ற காலம் முதலாக இப் பிரதேசத்தின் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளில் பல வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது இப் பிரதேச மக்களுக்கு நன்கு தெரியும் இதிலும் இப் பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்தியின் பொருட்டு இது வரை பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இப் பகுதி மாணவர்கள் இரவு நேரங்களில் தமது கல்வியை தொடர எனது மாதாந்த கொடுப்பனவு ஊடாக மின்வினயோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப் பிரதேச மாணவர்கள் கல்வியில் உயர்ந்து உயர் பதவிகளை அடைய வேண்டும் என்பதே எனது ஆவலாகும். இனிவரும் காலங்களில் கல்வியில் உயர் நிலை அடையாது விட்டால் எமது இனத்தினுடைய கடந்த கால நிலையினை நாம் கடந்து வந்த கடின நிலையினை எமது சமூதாயம் அறிய வாய்ப்பற்ற நிலை உருவாகி விடும். கல்வியில் உயர் நிலை அடைவதன் வாயிலாகவே எமது கடந்த கால நிலையினை பெறுமதி உள்ளதாக மாற்ற இயலும். இதற்கும் மேலாக இப் பிரதேசத்தின் உட்கட்டுமானங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் தொடர்பில் பல நடவடிக்கைகளை இப் பிரதேசத்தில் மேற்கொண்டுள்ளேன். இதே வேளை நாம் எமது மக்களின் தேவை அறிந்து வழங்கப்பட்டு இப் பிரதேசத்தில் நடைபெற்ற சில வேலைத் திட்டங்களில் எது வித சம்பந்தமும் இல்லாது அதிகாரிகளை மிரட்டி இவ் உதவித் திட்ங்களுக்கு தாம் தான் நிதி வழங்கியதாக மக்களை ஏமாற்றும் அரசியலை நாம் நடாத்தவில்லை. மக்கள் தொடர்பில் எம்வசம் உள்ள புள்ளி விபரங்களை கொண்டதாக எமது திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இதே வேளை இவ்வாறான மக்களை ஏமாற்றி மக்களை ஏமாளிகளாக்கும் அரசியலுக்கு மக்களே நல்ல தீர்ப்பினை வழங்கும் காலம் வெகு விரைவில் உருவாகும். இதே வேளை மக்கள் இங்கு நடைபெறும் வேலைத் திட்டங்கள் தொடர்பில் மிகுந்த அவதானிப்புடன் செயற்படுவது மிக முக்கியமாகும்.என குறிப்பிட்டார்