யாழ்.நகரை வந்தடைந்த யாழ்;தேவி-
 பளை – யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ் மத்திய புகையிரத நிலையத்திற்கு யாழ். தேவி வந்தடைந்துள்ளது. யாழ் தேவியின் வருகையை காண்பதற்காக யாழ். குடா நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவான மக்கள் யாழ் மத்திய புகையிரத நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். ரயில் சேவை ஆரம்பமாகியதை அடுத்து இரு மருங்கிலும் நின்று பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

		     வெளியாகியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை வசப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 274773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 36580 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுள்ளன. இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 51.25 வீத வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 40.24 வீத வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 05.36 வீத வாக்குகளையும் பெற்றுள்ளன. இதேவேளை சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி இரு மாவட்டங்களிலும் 6076 (0.89) வாக்குகளைப் பெற்றுள்ளது. எனினும் ஆசனங்கள் எதனையும் அக்கட்சியால் பெற முடியவில்லை.