Header image alt text

ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளி சிறார்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி-

pajanai padasalai 03யாழ். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் பயின்றவர்களுள் 14 சிறார்கள் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது வழிகாட்டலில் திரு. சே.ஞானசபேசன் அவர்களின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்து வாழும் திரு. வே.மணிவண்ணன் அவர்களது அனுசரணையுடன் 2014ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிற்கான இலவச புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

சித்தியடைந்த பிள்ளைகளின் பெயர் மற்றும் புள்ளிகள்

1. ஜெயக்குமார் திருட்டாஜினி – 159                                                                   
2. செந்தூரன் பிரிஜென்சி – 176
3. செந்தூரன் சரண்யா – 177
4. சந்திரவேல் மதுனிகா – 170
5. கஜேந்திரன் சிந்துஜன் – 169
6. உதயநாதன் ஆகாஸ் – 167
7. ரவீந்திரன் சோவிகன் – 161
8. ஆனந்தகிருஸ்ணன் ரதீபன் – 166
9. பிரசன்னா கபின்சன் – 163
10. சிவதாசன் தர்சனன் – 172
11. இராசரட்ணம் தனஞ்சிகன் – 180
12. விஜிதகுமார் தபீனா – 166
13. த. எழிலரசி – 171
14. செ. மதுமிதா – 158
Elalai Metku  (2)Elalai Metku (1)Elalai Metku (3)

ஊவா மாகாண முதலமைச்சராக ஷஷீந்ர ராஜபக்ஸ பதவிப்பிரமாணம்-

shasheendraஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ஷஷீந்ர ராஜபக்ஸ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் நந்த மித்ர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஊவா மாகாண சபைக்கு ஏனைய கட்சிகள் சார்பில் தெரிவான உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக மாகாண ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

லண்டன் பி.பி.ஸி தமிழோசையைக் காப்பதற்கு கை கொடுக்குமாறு வேண்டுகோள்-

கடந்த 74 ஆண்டுகாலமாக லண்டனிலிருந்து இயங்கி வரும் தமிழோசையை இந்தியத் தலைநகர் டெல்லிக்கு நாடு கடத்துவதற்கு பி.பி.ஸி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்தியா பொலிஸி எனும் திட்டத்தின் கீழ் இந்திய சாகரத்துக்குள் சேர்த்துவிட பி.பி.ஸி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு பக்கசார்பற்ற சர்வதேச தமிழ் செய்திநிறுவனம் தமிழோசையாகும். இது இலங்கை அரசியலில் பல்வேறுபட்ட தரப்பினரின் ஆதரவையும், அதே சமயம் விமர்சனத்தையும் தமிழோசை பெறுவதன்மூலம் தெளிவாகின்றது. இலங்கையில் சிறுபான்மையின மக்களுக்கு பி.பி.ஸி தமிழோசை இன்னமும் அவசியமானதாக உள்ளது. இந்நிலையில் தமிழோசையை லண்டனில் இருந்து டெல்லிக்குக் கொண்டு செல்வது தமிழ்பேசும் இலங்கை சிறுபான்மை சமூகங்களுக்கு பேரிழப்பாகும். பி.பி.ஸி சிங்கள சேவை லண்டனில் இருக்க, தமிழோசையை மட்டும் டெல்லிக்கு அனுப்புவது அந்தசேவை அதிகம் தேவைப்படும் மக்களுக்கு பெரும் இழப்பாக அமையும். எனவே இதனைத் தடுப்பதற்காக தயவு செய்து பி.பி.ஸி நிர்வாகத்துக்கும், பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கும் அனுப்புவதற்கான கீழுள்ள விண்ணப்பத்தில் பெயரைப் பதிவு செய்வதுடன் முகநூலிலும் பகிர்ந்துகொள்ளுமாறு கேடடுக்கொள்ளப்பட்டுள்ளது.

http://www.petitions24.com/signatures/save_the_london_bbc_tamil_broadcast/start/0

மேலும் செய்திகளை வாசிக்க…. Read more