Header image alt text

திருநாவற்குளத்தில் பேருந்து தரிப்பு நிலையம் – புளொட் தலைவர் திறந்து வைப்பு-

IMG_2828வவுனியா திருநாவற்குளம் பாரஊர்தி தரிப்பு நிலையத்திற்கு முன்பாக அமரர் தோழர் தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ) அவர்களின் ஞாபகார்த்தமாக இன்று பேருந்து தரிப்பு நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. மேற்படி பேருந்து தரிப்பு நிலையத்;தின் திறப்புவிழா ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் திருமதி சோதிமதி நகுலேஸ்வரம்பிள்ளை அவர்களின் தலைமையில் இன்று (03.09.2014) காலை 10.30மணியளவில் இடம்பெற்றது.

வவுனியாவின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஏற்பாட்டில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பேருந்து தரிப்பு நிலையத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் புளொட்டின் வன்னிப் பிராந்திய இணைப்பாளர் திரு க.சிவநேசன் (பவன்), பிரதேச சபை உறுப்பினர்கள் திரு இராஜசேகரம் (சேகர், திரு. ஜெகதீஸ்வரன் (சிவம்) மற்றும் திரு.செந்தில் அவர்களும், புளொட் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள், பொதுமக்களும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இன்று எமது அபிவிருத்திகள் பன்முகப்படுத்தப்பட்டு, பல வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எமது மறைந்த தோழர் இளங்கோ எமது அமைப்பின் வளர்ச்சியிலும், மக்கள் பணிகளிலும் என்றும் பின்நின்றதில்லை. அவரின் ஞாபகார்த்தமாக இன்று இவ் பேரூந்து தரிப்பு நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக வட மாகாணசபையில் 30 ஆசனங்கள் எமக்கு இருக்கின்றது, இது தனிப்பட்ட நபருக்கோ தனிப்பட்ட கட்சிக்கோ கிடைத்த வெற்றியல்ல, ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றியாகும். தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை தலைநிமிர வைக்க வேண்டுமானால் நாம் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

IMG_2764IMG_2745010203060504IMG_2779 (1)

இந்திய அதிகாரி பயணித்த கார் அதிவேக வீதியில் விபத்து-

karadiyanaru accidentஇந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் பயணித்த கார் தெற்கு அதிவேக வீதியில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாணந்துறைக்கும் தொடங்கொடைக்கும் இடையிலான 21ஆம் மைல் கல் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் பாதுகாப்பு சுவரில் மோதியுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது அந்த வீதியில் பயணித்த எம்பியூலன்ஸ் ஒன்றில் பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தார். சுரேஷ் ராவ் என்ற குறித்த அதிகாரியின் உடல்நிலை தேறியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரம் பெற்றால் மிருகபலி பூஜை செய்யலாம்-

Munneswaram_CIஅனுமதிப்பத்திரம் ஒன்றை பெற்ற பின்னர் சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிருகபலி பூஜை செய்யலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கான அனுமதிப்பத்திரத்தை சிலாபம் பிரதேச சபையில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மிருக பலி பூஜையின் மூலம் விலங்குகள் சித்திரவதை சட்டம் மீறப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு தேசிய பிக்குகள் சம்மேளனம் உள்ளிட்ட சில அமைப்புக்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை வாசிக்க…… Read more