இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உதவ தயார் – பிரித்தானியா-

imagesCA5L8U3Dஇலங்கையில் சமாதானம் காரணமாக பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. இந்தநிலையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் சமாதானக்கு தொடர்ந்தும் உதவும் என்று இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது 32வது சர்வதேச சமாதான தினம் நேற்று நினைவு கூறப்பட்டமையை முன்னிட்டு பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவியஸ் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது இலங்கையில் சமாதானம் அரசியல் பங்கேற்றல் மற்றும் பொருளதார அபிவிருத்தியை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

காணாமல் போனோர் தொடர்பில் 19,452 முறைப்பாடுகள் பதிவு-

kaanaamat ponorகாணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு கிளிநொச்சியில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த உள்ளது. எதிர்வரும் 27ம் திகதிமுதல் 4ம் திகதிவரை விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். 27ம் திகதி மற்றும் 28ம் திகதிகளில் முழங்காவில் பிரதேசத்தில் தமிழ் மகா வித்தியாலயத்தில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. 29ம் மற்றும் 30ம் திகதிகளில் பூநகரி பிரதேச செயலகத்தில் விசாரணைகள் நடைபெறவுள்ளன. கடந்தமுறை நடைபெற்ற விசாரணைகளில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியாதுபோன ஸ்கந்தபுரம் கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் 30ம் திகதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆணைக்குழு 7வது தடவையாக தனது கூட்டத்தை நடத்தவுள்ளதுடன் ஆணைக்குழுவிடம் இதுவரை 19,452 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் சுமார் ஆயிரம் முறைப்பாடுகள் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more