நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி ஸ்தாபகர் தினம் அனுஷ்டிப்பு-
 யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியானது 1929ம் ஆண்டு முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 85 ஆண்டுகளாக கல்விச் சேவை புரிந்து வருகின்றது. அத்துடன் தனது பணியை கல்வியுடன் நிறுத்தி விடாமல், விளையாட்டு, கலை, பண்பாடு மற்றும் இன்னோரன்ன துறைகளிலும் கவனம் செலுத்தி ஆயிரமாயிரம் கல்வியாளர்களை இக் கல்லூரி உருவாக்கியுள்ளது. நேற்று (22.09.2014) திங்கட்கிழமை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களின் 53ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நினைவுதின நிகழ்வின்போது தீபம் ஏற்றுதல், மலர்மலை அணிவித்தல், மலரஞ்சலி என்பன இடம்பெற்றன. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தீவக வலய கல்வி பணிப்பாளர் குணநாதன் அவர்களும், தியாகராஜா குருக்கள் (மணிஐயர்), முத்துக்குமரன், ராசேந்திரன் செல்வராஜா, கிராமசேவையார் சண்முகவடிவேல், நீர்வேலி வடக்கு சுந்திரலிங்கம், பரராஜசிங்கம் உள்ளிட்டோரும் விளக்கேற்றல் மலர்மாலை அணிவித்தலில் பங்குகொண்டிருந்தனர். கல்லூரியின் பழைய மாணவர்கள், கல்லூரியின் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பெருமளவிலானோர் இந்நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வின் இறுதியில் திரு திருமதி இராஜராஜேஸ்வரி சிவகுமார் தம்பதிகளின் ஏற்பாட்டில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

		     தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பாரளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்றுமாலை இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநதிகள் கலந்து கொண்டனர். இங்கு, இன்றிருக்கக்கூடிய அரசியல் நிலைமைகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பாரளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்றுமாலை இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநதிகள் கலந்து கொண்டனர். இங்கு, இன்றிருக்கக்கூடிய அரசியல் நிலைமைகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.  இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது புரியப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கையை சமர்ப்பிக்கும்போது தெரிவிக்கப்படும் விடயங்கள் உள்ளடங்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் மனித உரிமை ஆணையாளர் மேலும் கூறியுள்ளதாவது, கடந்தகால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது. புனர்வாழ்வு பணிகளில் இலங்கை அரசாங்கம் சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன்மூலம் இலங்கை மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நன்மைகளை ஏற்படுத்தப்படும். இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை நிராகரித்தது மற்றும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளேன். இலங்கையின் நீண்டகால நலன்களை கருத்தில்கொண்டு சர்வதேச விசாரணைக்குழுவுடனும் விசேட அறிக்கையாளர்களுடனும் ஒத்துழைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது புரியப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கையை சமர்ப்பிக்கும்போது தெரிவிக்கப்படும் விடயங்கள் உள்ளடங்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் மனித உரிமை ஆணையாளர் மேலும் கூறியுள்ளதாவது, கடந்தகால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது. புனர்வாழ்வு பணிகளில் இலங்கை அரசாங்கம் சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன்மூலம் இலங்கை மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நன்மைகளை ஏற்படுத்தப்படும். இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை நிராகரித்தது மற்றும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளேன். இலங்கையின் நீண்டகால நலன்களை கருத்தில்கொண்டு சர்வதேச விசாரணைக்குழுவுடனும் விசேட அறிக்கையாளர்களுடனும் ஒத்துழைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு வருகை தந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தேசிய செயலர் முரளிதர் ராவ் மற்றும் பா.ஜ.கவின் உலக வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், தேசிய நிறைவேற்று உறுப்பினருமான விஜய் ஜொலி ஆகியோர் இன்று மதியம் இந்தியா புறப்படுவதற்கு முன்பதாக ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவர்களை பட்டாடை போர்த்தி குமரகுருபரன் அவர்கள் வரவேற்றார்.
இலங்கைக்கு வருகை தந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தேசிய செயலர் முரளிதர் ராவ் மற்றும் பா.ஜ.கவின் உலக வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், தேசிய நிறைவேற்று உறுப்பினருமான விஜய் ஜொலி ஆகியோர் இன்று மதியம் இந்தியா புறப்படுவதற்கு முன்பதாக ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவர்களை பட்டாடை போர்த்தி குமரகுருபரன் அவர்கள் வரவேற்றார்.