வவுனியா திருநாவற்குளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புளொட் அமைப்பால் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. படங்கள் இணைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பணிப்புரைக்கமைய, தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளையைச் சேர்ந்த திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப் பங்களிப்பில் இவ் நிவாரண பொருட்கள் இன்றைய தினம் (31.12.2014) திருநாவற்குள மக்களுக்கு புளொட் அமைப்பால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் சமூகப் பணியில் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), முல்லை மாவட்ட இணைப்பாளர் திரு க.சிவநேசன்(பவன்), புளொட் முக்கியஸ்தர் திரு முத்தையா கண்ணதாசன் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் காண்டீபன், சுகந்தன், சஞ்சீ,நிகேதன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.