தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு-
 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத் தரப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று (12.01.2015) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது ஜனாதிபதித் தேர்தலின்போது வடகிழக்கு மக்கள் தமக்கு வாக்களித்தமைக்காக முதலில் மிக்க நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறினார். இதன்போது கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள், தமது பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தங்கள் வாக்குகளை தங்களுக்கு அளித்துள்ளார்கள் என்றார். அத்துடன் இதுவரை காலமும் நாங்கள் மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்திடம்; பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். ஆயினும் அவர்கள் எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். Read more
 
		     ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்றுமாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்றுமாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.  எமது கட்சியின் ஆதரவாளரான திரு. இ.தயாபரன் அவர்களின் 50ஆவது பிறந்தநதினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் நிகழ்வும், கருவி என்றழைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலயைத்திற்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (10.01.2015) சனிக்கிழமை யாழ். கோண்டாவிலில் இடம்பெற்றது. இதன்போது 53பேர் இரத்ததானம் வழங்கியிருந்தனர். அத்துடன் கருவி என்னும் மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தினருக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்தத்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் கோண்டாவில் இந்துக்கல்லூரியில் பயிலும் வறுமைக் கோட்டின்கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், இணுவில் லயன்ஸ் கழகத்தினருக்கு 10,000 ரூபாய் பணமும் வழங்கிவைக்கப்பட்டது.
எமது கட்சியின் ஆதரவாளரான திரு. இ.தயாபரன் அவர்களின் 50ஆவது பிறந்தநதினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் நிகழ்வும், கருவி என்றழைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலயைத்திற்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (10.01.2015) சனிக்கிழமை யாழ். கோண்டாவிலில் இடம்பெற்றது. இதன்போது 53பேர் இரத்ததானம் வழங்கியிருந்தனர். அத்துடன் கருவி என்னும் மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தினருக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்தத்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் கோண்டாவில் இந்துக்கல்லூரியில் பயிலும் வறுமைக் கோட்டின்கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், இணுவில் லயன்ஸ் கழகத்தினருக்கு 10,000 ரூபாய் பணமும் வழங்கிவைக்கப்பட்டது.