
அமரர் ஐயாத்துரை சுகதரன் (வீடியோ சுதா)
மலர்வு: 17.04.1968 (புங்குடுதீவு) உதிர்வு: 08.01.2015 (சுவிஸ்லாந்து)
துயர் பகிர்வோம்
பாசமிகு தோழனே!
எங்கள் பயணத்தில்
உனது பணியும் பாரியதுதான்..
பாதியிலே – நீ
எமைவிட்டு செல்வதுதான்
பாரிய வேதனையைத் தருகிறது
உன்னுடன் தோழமையோடு நேசமாய் இருந்த – நாமின்று
உன் இழப்பால் துயருற்று நிற்கின்றோம்
உன் நினைவும் உன் பணியும்
எம் அமைப்பின் வரலாற்று ஏடுகளில்
என்றென்றும் நிலைத்திருக்கும்….
அன்னாரில் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், உறவினர்களோடு, நாமும் எம் துயரை பகிர்ந்துகொள்வதோடு, அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலிகளையும் செலுத்தி நிற்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
மைத்திரிபால சிறிசேன வெற்றி – தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு-
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் ,நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 62 இலட்சத்து 17,162 (51.28%) வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமது நன்றிகளை இதன்போது குறிப்பிட்டார். இங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, “அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்திய தேர்தல்கள் ஆணையாளர், முப்படையினர் மற்றும் அதற்கு உதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி. மஹிந்த ராஜபக்ஷவுக்கு என் விஷேட நன்றிகள், எனக் குறிப்பிட்டார். மேலும் தேர்தல் முடிவுகளை அடுத்து, யாருக்கும் மனதளவிலும் வேதனை அளிக்க வேண்டாம் என மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அமெரிக்கா-
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கப் போகும் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். மேலும் முடிவுகளை ஏற்று வௌியேறிய மஹிந்த ராஜபக்ஷ குறித்தும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இலங்கையில் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களித்துள்ளதாகவும், ஒவ்வொரு வாக்கும் வெற்றியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறந்த முறையில் தங்களது வாக்குரிமையை உறுதி செய்து கொண்ட அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜோன் கெர்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார். மிகவும் அமைதியான முறையில் சுயாதீனமான தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையாளர், சிவில் சமூகத்தினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரே பார்வையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்-
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடுபூராகவும் நேற்றையதினம் இடம்பெற்றன. வெளியான தேர்தல் முடிவுகளின் படி, புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 6,217,162 (51.28%) வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவை விட 449072 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தனதாக்கியுள்ளார். இதில் மஹிந்த ராஜபக்ஷ 5,768,090 (47.58%) வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி ஒவ்வொரு மாகாணங்களிலும், தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையில் முக்கிய வேட்பாளர்கள் இருவரும் பெற்றுக் கொண்ட வாக்குகள் பற்றிய விபரங்கள் வருமாறு,
வடமாகாணம்
யாழ் மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 253,574 (74.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 74,454 (21.85%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்களிப்பு முடிவுகளின் பிரகாரம், யாழ் மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 10,885 (69.17%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,607 (29.27%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். வன்னி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 141,417 (78.47%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 34,377 (19.07%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்களிப்பின் படி, மைத்திரிபால சிறிசேன 4,750 (61.24%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 2,940 (37.91%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 209,422 (81.62%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 41,631 (16.22%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 6,816 (80.55%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 1,605 (18.97%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 140,338 (71.84%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 52,111 (26.67%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்களிப்பின் படி, மைத்திரிபால சிறிசேன 8,323 (56.94%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 6,207 (42.46%) வாக்குகளையும் பெற்றுள்ளனர் . திகாமடுல்லை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 233,360 (65.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 121,027 (33.82%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 11,917 (54.89%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 9,713 (44.74%) வாக்குகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளனர்.
மத்திய மாகாணம்
மாத்தளை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 145,928 (47.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 158,880 (51.41%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 8,394 (49.60%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 8,483 (50.13%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 272,605 (63.88%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 145,339 (34.06%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 6,699 (52.37%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 6,057 (47.35%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். கண்டி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 466,994 (54.56%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 378,585 (44.23%) வாக்குகளையும் வசமாக்கியுள்ளனர்.
தென் மாகாணம்
காலி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 293,994 (43.37%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 377,126 (55.64%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 13,879 (46.06%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 16,116 (53.49%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 212,435 (41.24%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 297,823 (57.81%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 10,382 (43.71%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 13,270 (55.87%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 138,708 (35.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 243,295 (63.02%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 5,620 (35.18%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 10,295 (64.45%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மேல் மாகாணம்
கொழும்பு மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 725,073 (55.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 562,614 (43.40%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 12,160 (48.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 12,856 (51.19%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 669,007 (49.83%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 664,347 (49.49%) வாக்குகளையும் பெற்றுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 20,386 (49.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 20,296 (49.71%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 395,890 (52.65%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 349,404 (46.46%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 14,830 (53.15%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 12,962 (46.46%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 12,962 (46.46%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வடமேல் மாகாணம்
குருநாகல் மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 556,868 (53.46%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 476,602 (45.76%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 33,384 (51.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 31,591 (48.47%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 202,073 (50.04%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 197,751 (48.97%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 4,864 (50.58%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,721 (49.09%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வடமத்திய மாகாணம்
பொலன்னறுவை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 147,974 (57.80%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 105,640 (41.27%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 9,480 (68.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,309 (31.10%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். அனுராதபுரம் மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 281,161 (53.59%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 238,407 (45.44%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 23,032 (53.72%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 19,643 (45.82%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஊவா மாகாணம்
பதுளை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 249,524 (49.21%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 249,243 (49.15%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 13,031 (49.62%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 13,115 (49.94%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். மொனராகலை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 172,745 (61.45%) வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 105,276 (37.45%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 8,281 (52.26%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 7,513 (47.41%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணம்
இரத்தினபுரி மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 379,053 (55.74%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 292,514 (43.01%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 11,864 (56.56%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 9,053 (43.16%) வாக்குகளையும், பெற்றுள்ளனர். கேகாலை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 278,130 (51.82%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 252,533 (47.05%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 14,163 (48.43%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 14,976 (51.21%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இம்முறை தேர்தலில் 15,044,490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததோடு, 15,264,377 (81.52%) பேர் தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். அவற்றில் செல்லுபடியான வாக்குகள் – 12,123,452 (98.85%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 140,925 (1.15%)
ஜனாதிபதி தேர்தல் 2015: அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுகள்
இரத்தினபுரி மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுகளின் படி
மகிந்தராஜபக்ஷ 11,864 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 9,053 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
கேகாலை மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 14,976 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 14,163 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
காலி மாவட்ட அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 16,116 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 13,879 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மாத்தறை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 13,270 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 10,382வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொலனறுவை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மைத்திரிபால சிறிசேன 9,480 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மகிந்தராஜபக்ஷ 4,309 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஹம்பாந்தொட்ட மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 10,295 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 5,620 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மாத்தளை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 8,683 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 8,394 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மொனராகலை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 8,281 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 7,513 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பதுளை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 13,115 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 13,031 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அஞ்சல்மூல வாக்களிப்பின்படி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 10885 வாக்குகளை பெற்றுள்ளார்
மஹிந்த ராஜபக்ச 4607 வாக்குகளை பெற்றுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கொல்லன் கலட்டி தமிழ் கலவன் பாடசாலையில் தனது மனைவியுடன் சென்து வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மாவை இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், தமிழ் மக்களை பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தோம். அதற்கமைய மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இரண்டு மூன்று வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று பார்த்தேன். அங்கு அதிகமான மக்கள் வாக்களிப்பதற்காக சென்று வருகின்றனர். பொது எதிரணி வேட்பாளர் வெற்றிபெறுவது நிச்சயம் என அவர் தெரிவித்தார்.
வாக்களிப்பு ஒருவருடைய விருப்பமாகும் அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது களவாகவோ அபகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கள்ளவாக்கு போடுவதற்கு யாராவது வந்தால் முழங்காலுக்கு கீழ் சுட வேண்டிய அவசியமில்லை. கள்ளவாக்கு போட்டுவதற்கு வந்தால் அல்லது குழப்பங்களை விளைவிக்க முயற்சித்தால் அவ்வாறானவர்களின் தலையில் சுட வேண்டும் என்றார்
யாழ்.பருத்தித்துறை அல்வாய் சிறீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசியுள்ளதாகவும். இதனையடுத்து, வாக்களிப்பு நிலையத்துக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியட்சகர் தெரிவித்தார். இது தொடர்பில் கபே அமைப்புக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு உறுப்பினர்களை அங்கு அனுப்பி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கபே அமைப்பின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார். மேலும் பக்கத்தில் உள்ள பற்றைக்குள் இருந்து பல கைக் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சில் கேலிச்சித்திரங்களுடன் வெளிவரும் நகைச்சுவை வார இதழான ‘சார்லி ஹெப்டோ’வின் அலுவலகம் மீது இன்று நண்பகல் முகமூடி அணிந்த இரு துப்பாக்கிதாரிகள் தானியங்கி இயந்திர துப்பாக்கி மூலம் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டும் ஐந்து பேர் ஆபத்தான நிலையிலும் 20 பேர்வரை காயமடைத்தும் உள்ளனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் போலிஸ் அதிகாரிகள்
தப்பியோடியுள்ளனர். இவர்களை பிடிக்க பெரும் பொலிஸ் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பிந்திய தகவல்களின் படி இச் செயலுடன் மூவர் சம்பத்தப்பட்டுள்தாகவும் தாக்குதலை நடத்தியோர் இனக்கணப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வுகள் 30.12.2014 செவ்வாய்க்கிழமை மாலை 2மணியளவில் வலி மேற்கு பிரதேசசபை கலாச்சார மண்டடபத்தில் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இந்திய துணைத் தூதுவர் திரு.எஸ..தெட்சணாமூர்த்தி அவர்களும் அவர்களது பாரியாரும் கலந்து சிறப்பித்தனர் இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் வன.பிதா. கலாநிதி. டி.எஸ். சொலமன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக உலக தரிசன நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் ஆர்.ஜே. அன்டனி மற்றும் தொழிலதிபர் திரு.ச.சுகந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.
காங்கேசன்துறை புதிய ரயில் நேர அட்டவணை-
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பிரதிநிதிகளும், வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் வாக்குப் பெட்டிகள் கொண்டுசெல்லும் பஸ்களின் பின்னால் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்கெண்ணும் நிலையத்தின் இறுதி பொலிஸ் காவலரண் வரையில் குறித்த பிரதிநிதிகள் செல்ல முடியுமென கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் கூறியுள்ளார். அத்துடன், வாக்குப் பெட்டிகளை மாற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் முறையாக வகையில் இடம்பெறும். நாங்கள் சட்டத்தை கடுமையாக கடைப்பிடிப்போம். பெட்டி மாற்றப்படும் என்று இன்னும் யாரும் எண்ணிக்கொண்டிருப்பார்கள் என்றால் தயவு செய்து அதனை கைவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் நாளை மறுதினம் காலை வேளையிலேயே வாக்களிப்பு நிலையங்களிக்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வாக்காளர்கள் காலை 7 மணிமுதல் தமது வாக்குகளை பதிவு செய்யமுடியும் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடவடிக்கைளுக்காக பிரதேச மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும், தேசிய அடையாள அட்டை இல்லாது வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வீட்டின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இது தொடர்பாக அனந்தி சசிதரன் தெரிவிக்கையில், சுழிபுரம் வழக்கம்பரையில் உள்ள எனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 1.30மணியளவில், சரமாரியாக கற்கள் வீசப்பட்டன, இதனையடுத்து உடனடியாக எழுந்து விளக்குகளைப் போட்டவுடன், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து பொலிஸாருக்கும், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும், முறைப்பாடு செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்குமாறு அனந்தி சசிதரனின் குரலில் நேற்று உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரம் ஒளிப்பரப்பாகியிருந்தது. அது தமது குரல் அல்ல என்றும், அந்த விளம்பரத்தை ஒளிபரப்ப கட்டணம் செலுத்தியவர்களின் விபரத்தை தரக்கோரியும், அனந்தி ஒன்றை எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தபால் மூலம் வாக்களிக்க தவறியோருக்காக இன்று விசேட வாக்களிப்பு நடத்தப்படவிருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்துள்ளார். இதன்படி, வாக்காளர்கள் தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று தமது தபால் மூல வாக்குகளை வழங்க முடியும். காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரையில் தபால் மூல வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு டிசம்பர் 23, 24 ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ தபால் மூல வாக்களிப்பு நடத்தப்பட்டதுடன் தவிர்க்க முடியாத காரணங்களால் அன்றைய தினம் வாக்களிக்க தவறியவர்களுக்காக டிசம்பர் 30 ஆம் திகதியன்றும் விசேட வாக்களிப்பு நடத்தப்பட்டது. பொலிஸ் அதிகாரிகளுக்காக 26 ஆம் திகதியன்று தபால் மூல வாக்களிப்பு நடத்தப்பட்டது. எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அநேகமானோர் அன்றைய தினம் வாக்களிக்க தவறியமையினால் மேலுமொரு சந்தர்ப்பம் வழங்கும் முகமாகவே இன்றும் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் இருவர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தாவியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், தாங்கள் அவ்வாறு செயற்படவில்லை என நகரசபை உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகிய இருவரும் விளக்கமளித்தனர். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எங்கும் செல்லமாட்டோம் எனக் கூறிய ஜெ.ஜெயராஜா, ‘எனது தனிப்பட்ட தேவை காரணமாக நான் கொழும்பு சென்றிருந்த தருணத்தில், நான் கட்சி மாறுவதற்காக கொழும்பு சென்றுள்ளேன் என செய்திகள் பரவியுள்ளன’ என்றார். ‘இருந்தும் நான் கட்சி மாறவில்லை. பொய்ப் பரப்புரைகளில் எவரும் ஈடுபடவேண்டாம். நாங்கள் எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களாகவே இருப்போம்’ என கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போய் இம்மாதத்துடன் 5 வருடங்கள் நிறைவடையும் நிலையில் அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறும் கோரி எக்னெலிகொடவின் குடும்பத்தாரும் சிவில் அமைப்புகளும் இணைந்து இன்று முற்பகல் அலரி மாளிகைக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற ஓரிரு தினங்களுக்கு முன்பு பிரதீப் எக்னெலிகொட காணாமல்போனதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார். அவர் அரச தரப்பினரால் கடத்தப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்திய அவர் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் இதனால் தமது குடும்பம் பெரும் குடும்பச் சுமைகளையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். எக்னெலிகொடவின் குடும்பத்தினருடன் அரசியல் பிரமுகர்கள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் சுமார் 2 மணிநேரமாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்விடத்துக்கு வந்து தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தபோதும் ஜனாதிபதி வருகை தராததால் தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுப்பட்டதாக தெரியவருகின்றது.