Header image alt text

Sumanthiran_samஇலங்கையின் சுதந்திர தின விழாவில் சம்பந்தர், சுமந்திரன் பங்கேற்பு

கொழும்பிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக இல்லாத வகையில் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் மற்றும் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழர்களின் எதிர்காலம் கருதியே சுதந்திர தின நிகழ்வில பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பிறகே தான் முடிவெடுத்ததாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பிபிசியில் தெரிவித்துள்ளார். Read more

இலங்கையின் அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

sureshசுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றது அவர்களின் தனிப்பட்ட முடிவு.
அவ்விருவரும் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இது தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந் நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் பங்கேற்பு உகந்ததாக இருக்காது என தானும், மாவை சேனாதிராஜாவும் அவரிடம் கூறியதாகவும்.
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என்பது இலங்கையின் அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமம் என்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதில் பங்குபெறாமல் இருந்து வந்தன.
ஆனால் இப்போது என்ன அடிப்படையில், என்ன காரணத்துக்காக அவ்விருவரும் கலந்து கொண்டனர் என்பதும் கூட யாருக்கும் தெரியாது. அவர்களின் பங்கேற்புக்கும் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது எனும் கருத்தும் ஏற்புடையது அல்ல என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

சபை அமர்வில் கலந்துகொள்ள திஸ்ஸவுக்கு அனுமதி-

thissa-arrestவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்போது அவற்றில் கலந்துகொள்ள அனுமதி வழங்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று, சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சபை அமர்வுகளில் கலந்துகொள்ள திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவினால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். இருப்பினும் இன்று திஸ்ஸ அத்தநாயக்கவை பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை

வவுனியா துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்-

ethirani vedpalaruku atharavu sooduவவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெரிய உலுக்குளம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், இரவு நேர இரவு பாவக்குளம் அருகே ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளின் கைகள் மற்றும் ஒரு காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. பொலிஸ் கான்ஸ்டபிள் தற்போது வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாட்டை விட்டு வௌியேற கேபிக்கு தடை உத்தரவு-

KPபுலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாபான் என்ற கே.பி. இலங்கையை விட்டு வெளியேற, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கே.பி.யை கைது செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜனவரி 19ம் திகதி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.