காங்கேசன்துறை துறை முகத்தை புனரமைக்கவுள்ளதாக அறிவிப்பு
 காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்து அபிவிருத்தி செய்வதன் ஊடாக வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக துறைமுக அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்தார். யாழ் காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை வருகை தந்த அமைச்சர், துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், புதிய அரசாங்கம் பாதுகாப்பு தேவைகளுக்கு தவிர ஏனைய காணிகளை பொது மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதேபோல காங்கேசன்துறை துறைமுகத்தை கடற்படையிடம் இருந்து பெற்று, வர்த்தக நோக்குக்காக அதனை புனரமைப்பு செய்து அபிவிருத்தி செய்வதன் ஊடாக வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முடியும். துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ளவுள்ளதாக கூறினார்.

பெண்களும் பொது அமைப்புக்களும் இணைந்து கையெழுத்திட்டு தங்களின் கோரிக்கையை ஜனாதிபதிக்கு மகஜர் வடிவில் அனுப்பியுள்ளனர்.
 இலங்கையில் கடந்த காலங்களில் நடந்துள்ள வன்முறைகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை புரிந்தவர்களுக்கு எதிராக சுதந்திரமானதும் நம்பகத்தன்மை உள்ளதுமான விசாரணைகளை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் 20 பொது அமைப்புக்களும் இணைந்து கையெழுத்திட்டு தங்களின் கோரிக்கையை ஜனாதிபதிக்கு மகஜர் வடிவில் அனுப்பியுள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியிலும் பல்வேறு ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணைகளில் பங்கெடுத்தவர்கள் என்ற வகையிலும் தாங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
 
		     தமிழ் மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடமாகாணத்தின் இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழனன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடமாகாணத்தின் இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழனன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். யாழ் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட  சுமார் 1,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காகவே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவை பத்திரித்துக்கே  அங்கிகாரம் கிடைத்துள்ளது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
யாழ் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட  சுமார் 1,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காகவே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவை பத்திரித்துக்கே  அங்கிகாரம் கிடைத்துள்ளது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இலங்கையின் வடமாகாணசபையில் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டு இழுபறி நிலையில் இருந்துவந்த இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்கிற தீர்மானம் செவ்வாயன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் வடமாகாணசபையில் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டு இழுபறி நிலையில் இருந்துவந்த இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்கிற தீர்மானம் செவ்வாயன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முகாமாலை பகுதியில் மீளக்குடியமர்வதற்கு விருப்பம் தெரிவித்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 1,220பேர்  பதிவு செய்துள்ளதாக பளை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி, முகாமாலை பகுதியில் மீளக்குடியமர்வதற்கு விருப்பம் தெரிவித்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 1,220பேர்  பதிவு செய்துள்ளதாக பளை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.